பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 லா. ச. ராமாமிருதம்

வாங்கல். ஆனால் தேகத்தில் ஜவாலை முறுக்கு; இன்னென்று புரியா ஸ்புடத்தில்; மேனி மின்னிடம் பொன்னுக்கு; இத்தனை நாள் என் கண் எப்படி

அவிஞ்சு போச்சு ? விளக்கைச் சுற்றி வட்டமாய் பந்கி நடக்கிறது பாரேன் சாதத்தை குருவி மாதிரி கொறிக்கறதை !

சுப்பு ஒருபிடி கூட இழுக்கிறாள். சுப்பு, கிழவருக்கு இடதுபுறம் உட்கார்ந்திருக்கிறாள். பிடிக்குப் பிடி கிழவரின் முகக்கடுப்பு இளகுகிறது. பாவம் பசி பொல்லாதது. கீரை மசியல் சட்டியை சரண் டினால் அகப்பையில் வரவில்லை. அதிலிருந்தே தெரியறதே அவருக்குப் பிடித்தமாய் அமைஞ்சு போச்சு போல இருக்கு. எனக்கு இல்லாட்டா என்ன ? அதுவே என் சந்தோஷம்.

பச்சை வாழையிலையில் மோருஞ்சாதத்தின் தூய வெண்மையின் ந்டுவே கீரையும் குழம்பும் கலந்து சுத்தமாய்க் குளம் கட்டி இருப்பது எடுப்பாயிருக்கு.

'ஏலே சுப்பு ! உன் மூக்கில் ஒரு புறா உட்காந்தி ருக்கு” சுப்பு பயந்து மூக்கைத் தடவி பார்த்துக் கொள்கிறாள். வாய் நிறைய கவளம். கண்கள். கரு வண்டாய் பளபளக்கின்றன.

ஒண்ணுமில்லை-நீ என்னோடு பேசவேண்டாம் போ ! நீ தான் என்னை அடிச்சயே !” உதட்டைப் பிதுக்குகிறாள் "அதோ மூக்கிலிருந்து உச்சி மண்டைக்கு வந்துடுது : அவளை அறியாமலே சுப்புவின் கை மண்டைக்கு துக்குகின்றது.

"எனக்கென்ன அதோ தோள்மேல் நிக்கறது ! "அதோ எனக்கென்ன தோள்மேல் நிக்கறது : தோளைத் தொட்டுப் பார்த்துக்கொள்கிறாள்.

"நான் எப்படிப் பொய் சொல்வேன். நானே விட்ட வெள்ளைப் புறான்னா !” சுப்புவுக்கு சிரிப்பு பீரிடுகிறது