பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌酶 லா. ச. ராமாமிருதம்

"பக்’னு பாதி வாங்கிட்டான். வாய்விட்டால், அழுதால் கூட தேவலை, ஊமையடிப்பட்டுத் தவிக்கிறான்.'

சேகருக்கு என் மேல் பட்சம் கூடத்தான். என்மேல் காலைப் போட்டுக் கொண்டால்தான் அவனுக்குத் துக்கம் வரும். .

'கண்ணன் என்ன பண்ணுகிறான்?"

கண்ணன் ரெண்டு தடவை அப்பா இன்னும் வல்லியா'ன்னு கேட்டான். அப்புறம் பந்தை எடுத்துக் கொண்டு ஒடிப்போயிட்டான்.”

எனக்குத் தெரியும். கண்ணன் சமாளித்துக்கொண்டு விடுவான்.

எல்லோருமே சமாளித்துக்கொண்டு விடுவார்கள்.

நாள் ஆகஆக, உடலில் உப்பும் தண்ணும் ஊற ஊற, சதை தடிக்கத் தடிக்க, எல்லோருமே எல்லாவற்றையும்ே சமாளித்துக் கொண்டு விடுவார்கள்.

அம்மா என்ன பண்ணுகிறாள்?-என்று நான் கேட்க வில்லை.

கேட்க மாட்டேன்.

கண்ணனுக்குப் பந்து.

ராஜூவுக்கு சிகரெட்.

விஜிக்கு லாலி பப்பு'

ராதைக்குச் சினிமா. .

சேகர் தான் பாவம் கொஞ்சம் திண்டாடுவான்.

பிறகு அவனும் சரியாகி விடுவான்.

வாழ்க்கையே மறதியின் வெற்றிதானே.

நான் ராஜூவின் தோள்மேல் கை வைத்தேன்.

"ராஜூ, Dont bother. நான் எங்கே காட்டுக்கா போய்விட்டேன்? எனக்குத் தோன்றும்போது வருகிறேன். நீங்களும் என் ரூமுக்கு வாருங்கள்! இன்று நேரமாகி விட்டது. நாளை காலை வா, உன் பேரில் பேங்கில் கணக்கு வைக்கனும் குடும்பத்தை இனி நீதான் பார்த்துக்