பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? லா. ச. ராமாமிருதம்

பிள்ளைக்கு திருமலைக் கோவிலில் வெச்சுக் கட்டிக் கொடுத்துடப் போறேனுங்க. ரொம்ப சொல்பமா பத்தி சிகைக்கூட அச்சடிக்கல்லே. உங்களைக்கூட அழைக்கலே.

ஆசிர்வாதம் ப ண் ணு ங் க. இந்த நகையெல்லாம் சின்னப் பொண்ணுக்குப் பூட்டி நேரே கோவில்லேருந்தே அவ வீட்டுலே கொண்டு .ே ட | ய் விட்டுடப்

போறேன். அந்தக் கலியாணம் பிரமாதமுங்க. கடைய நல்லூர் ஷன்முகசுந்தர நாயனம், நாலு நாள் ஊர ழைச்சு சாப்பாடு.ஆனால் நம்மதென்ன போச்சுங்க?புல்லெல்லாம் நெல்லா விளையற நாள் சந்தனம் சிந்தின இடம் சேறு குப்பையோடே பொன் கலந்திருக்கும். இல்லாட்டி, இதெல்லாம் இப்போ வாங்க முடியுமா, செய்ய முடியுமா?

பேரப் பையன்களும் என் பொண்ணு வயிறு. இன்னொருத்தி அவள் இடத்துக்கு வந்தால் காரணம் காட்டியோ இல்லாமலோ மாற்றாந்தாய் கொடுமைக் காரப் பழி பொல்லாப்பு நமக்கேனுங்க? தவிர, கலியான கோலத்துலே ஜரிகைப் புடவையைக் கட்டிகிட்டு, செத்துப் போனவ வானத்துலே நின்னுகிட்டு, கையைப் பிசைஞ்சு கிட்டு யார் கண்ணுலேயும் தென்படாமல் வடிக்கின்ற ஊமைக் கண்ணிருக்கு யார் பதில் சொல்றது? மாப்பிள்ளை கும் இன்னும் முதல் தாரம் கட்டி வாழிற வயதுதான். நான் பெண் கொடுக்காட்டா அவர் வேறே கடடாமே யிருக்க முடியுமா? பெரிய வேலைங்க. டி.புடி ரெஜிஸ் தாரருங்க. நல்ல செயலுங்க.

என் சின்னப் பொண்ணும் காலையிலே சானி தெளிக்கறப்பவோ, மாலையிலே விளக்கேத்தறப்பவோ, உலையிலே அரிசியைக் களைஞ்சு போடறப்பவோ, ராவுலே அடுப்பை மெழுகி, கோலம் போடறப்பவோ, தாலியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கிட்டே திக்குத் திக்குனு குடித்தனம் நடத்தவேணாம். ரெண்டு பேரும் ஜோடிப் பொருத்தம் இன்னும் நல்லாவேயிருக்குங்க. ரெண்டு பேரும் நல்ல செவப்பு. அவள் முதல் குழந்தையை