பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிகள் 每念

பெத்துச் சீராட்டறப்போ உங்களைக் கண்டிப்பாக் கூட்டிப் போய்க் காட்டியே ஆவணுங்க. சரி, உங்களுக்கு நேரமாச்சு. நான் போய் வரேனுங்க.”- அவன் போய் விட்டான்.

நான் நாற்காலியில் சாறு பிழிந்த குற்றுயிர்ச் சக்கை யாய்க் கிடக்கிறேன். குற்றாலத்தின் மலயமாருதம் தவழ்ந்து வந்து நெற்றி வேர்வையை ஒற்றியது.

இதயத்தில் எங்கோ ஏதோ பலகணி தானே திறந்து கொள்கிறது. அதன் வழி, இன்னதென்று பிடிபடாத, புலப் படாத தண்ணொளியின் நிழற் கோடுகள் வரிவரியாய், இதயத்துள் விழுகையில் உள்ளம் பூரா, உள்ளம் மூலம் உடல் பூரா ஏதோ வெளிச்சம் ஏற்றிக் கொள்கிறது. கண்ணிரில் குழைத்திட்ட திலகமாய் நெற்றி நடுவில், ஏதோ புரியாத, புலப்படாத, பிடிபடாத வெற்றி குளு குளுவென மிளிர்கின்றது.

வரிகள்: