பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீ பக் 莎窝

துக்கு உதவினது அவாதான். கோவில்ல வச்சுத்தான் கல்யாணம். கோவில் வெளிச்சத்துலே. நாலு பக்கமும் வச்சு நாலு பந்தி வடியலுக்கு அரிசி அளந்தது அவாதான். தாலியும் புடவையும் அவங்க உபயம். ஆனா, மூலம் ரெண்டு, இரணியா ஒண்னு ஆபரேசன் மூனுக்குக் கொடுத்தது கடன்தான்னு கங்கணம் கட்டனாங்க. நான் எங்கே கடனை கொடுக்கப் போறேன்? என் கடன் திருமா? நான் சொல்லியாச்சு. ஐயா நான் உங்க காலில் தேஞ்ச செருப்புத் தோல், உள்ளங்காலோட ஒட்டிப்போய் குதிகால் சதையோட வளந்தாச்சுன்னு. இந்த ருவாயை மூக்கை சொரிஞ்சு காதைத் திருவி, கன்னத்தைக் கிள்ளிக் காட்டற பரிபாஷையில் பற்று எழுதினாலும் இதெல்லாம் காட்டாத கணக்குல சேர்த்ததுதான். காலத்துக்கேப்ப ஒரு பச்சை நோட்டும் அதுல பாதியும் பாக்கறேன். பாவம் பொழைச்சுப் போறேன். அம்பது வருடத்துலே முனு. தலைமுறை முதலாளி பார்த்து. இதுகூட இல்லாம இருக்குமா?

ஆனா இத்தெல்லாம் என்னை நம்பித்தானே விட்டு ருக்காங்க! அவங்க காரைக்குடியில் அமர்ந்துகிட்டு அந்த நன்றி மறக்கலாமா? அத்தாலேதான் ஒரு நாளைககு .ெ ர ண் டு த ட் டி யே னு ம் இந்த தள்ளாமையிலேயும் திருப்பதி மலையாட்டம் பாங்கு மாடி ஏர்றேன். மாடி ஏர்றபாவமோ புண்ணிய மோ. பாங்கு கணக்கு படியேறி வந்த இடத்துல குந்த வச்சி நீங்கதான் பேசlங்க ஒரொரு நாள் காப்பியும் ஆர்டராவுது. எல்லாம் நீங்க கொடுத்த இடந்தான் இப்படிப் பேச வைக்குது.

பேங்குலே மட்டுமில்லே, நாங்களும் இரும்புப் பெட்டி வச்சிருக்கோம் பாத்தேயளா? முட்ட முட்ட அத்தனையும் தங்க நகைங்க. பேங்க்குல மறு அடகு வச்சுருக்கோம்: வெறும் கண் துடைப்பு. பேர் பொறிச்சுது, கல் பதிச்சது. நீங்க எடுக்க மாட்டீங்களே. நாங்க எல்லாம் எடுப்போம். பாட்டன் சொத்தா, திருட்டுச் சொத்தா கேக்கமாட்