பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபக் 级夏

திருக்கிறாள். நெற்றி மஞ்சள் பூச்சின் நடுவில் குங்குமம் விழியுருட்டுகிறது.

மற்றுமொரு இதழில்: ஒரு கிழவி வெண்கலக் கின்னியில் அவளுடைய கிழவினுக்கு சோறு வட்டிக்கிறாள், படகு போன்ற உடல், நெற்றியில் தகடு போன்று பொட்டு, அவள் குனியுமுன் அவள் தொந்தி சரிகின்றது. பேறுக்கு இடம் கொடுத்துக் கொடுத்து அகன்று விட்ட புவனம், ரவிக்கையைத் துறந்த திரண்ட தோளோடு தொங்கத் தொங்கக் கட்டிய மஞ்சள் கயிற்றில் இரட்டைத்தாலி வெற்றி வீசுகிறது.

வேறு ஒரு இதழில்: ஒருத்தி தன் மகனைத் தோள்மேல் சாத்திக்கொண்டு அவன் வாயில் எதையோ புகட்டிக் கொண்டிருக்கிறாள் மருந்தோ பாலோ ? மார்த்துணி கலைந்தது அறியாள், பொங்கும் பாற்கடலில் ரவிக்கை நனைந்ததுமறியாள். வாயில் செலுத்தியது கடைவாயில்தான் வழியுமோ ? அல்லது அத்தோடு சேர்ந்த கண்ணிர் மகிமையில் நெஞ்சு வரைப் போய் சஞ்சீவியாய் மாறுமோ ?

ஒரு பெரு இதழின் மட்டத்தினன்று ஒரு மாட்டின் கழுத்தும் அதைக் கட்டிக் கொண்டு ஒரு முகமும் மட்டுமே தெரிகின்றன. மாட்டின் கொம்புகள் அதன் எசமானனின் முகத்தை ப்ரபை போல் சட்டம் கட்டுகின்றன. அவன் கண்களில் தான் என்னே கடல் விளிம்பில் கரை ஓரம் தனி உருவம் நிற்கும் ஆற்றொனாத் துயரம் மாடு கண்ணாடி பளபளப்பு ஏறிக் கொண்டே வரும் அதன் கடைசிப் பார்வையை அவன் மேல் நிலைகுத்த முயல்கிறது,

பூவின் வயிற்றிலிருந்து ஒரு அழகி இடுப்பில் குடத் துடன் இதழ்ப் படிகளில் ஏறி வருகிறாள் குத்து விளக்கின் வரிசையை ஒட்டிக் குலுங்கிக் குலுங்கி வருகிறாள். விளக் கின் சு டர் க ள் அவளைத் தனித்தனியாய்த் தழுவப் பார்க்கின்றன. குனிந்து பாதத்தில் பணிய வருகின்றன. அவளைத் தொட விழைகின்றன. அவைகளின் வியர்த் தத்தைக்கண்டு அவள் வாய்விட்டுச் சிரிக்கையில் மேல்பல் வரிசையில் ஒரு தெற்றுப் பல் ஒளி வீசுகின்றது.