பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வியூகம்

வீட்டு முகப்பிலிருந்து பிதுங்கிய பால்கனியில் அவன் நின்று கொண்டிருக்குமிடத்திலிருந்தே அப்பருந்து வட்ட மிட்டுக்கொண்டே வானிலிருந்து கீழ் நோக்கியிறங்கு. வதைக் கண்டான். அவனுடைய அப்போதைய மன நிலையில்,அதன் விரிந்த சிறகுகள் ஊரையே போர்த்துவது. போலிருந்தன.

சுற்று முற்றும் தெரியும் வீட்டுக் கூரைகளின் நடுவில் ஓங்கிய ஒரு மசூதி ஸ்தூபியின்மேல், அது சிறகுகளை ஒடுக்கிக் கொண்டு வந்து அமர்ந்தது. அவனைப் போலவே அதுவும் ஊரின் நிலையைச் சிந்திப்பது போன்று சுற்று முற்றும் நோக்கிக்கொண்டு மெளனமாய் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் தோற்றமே ஒரு அபசகுனம். அதன் மெளனம் அதனினும் பயங்கரம். யார் தன்னுள் எப்பொழுது விழப் போறார்கள் என்று வாயைத் திறந்து, கொண்டு காத்திருக்கும் பாழுங்கிணற்றின் ஆழமான மெளனம்.உயிர் நீங்கியவைகளைத் தின்றுத் தின்று உயிர்த் பிரிந்த சடலத்தின் உயிருள்ள மெளனத்தின் உருத்தானோ ப ரு ந் து க் க ள் என்றும் அவன் எண்ணியதுண்டு. அபசகுனங்கள்.

ஆயினும் ஊரில் இரண்டு மாதங்களாகவே அக்கா வாசந்தான். நாயும் நரியும் ஒடின என்று வசனம் சொல்லக்கூட நாய்கள் கண்ணில் படவில்லை. ஊர் அவ்வளவு வெறிச்சென்றாய் விட்டது.

"ஜப்பான்காரன் அதோ அங்கு வந்து விட்டான்' இதோ இங்கு வந்து விட்டான்' என்ற குபார், கிளம்பியதும், சமுத்திரக் கரையோரம் இருப்பவர்கள் ஊருக்கு உட்புறம் நகர்ந்தார்கள். ஊருக்கு உட்புறம் இருப்பவர்கள் ஊரை விட்டுவெளியேற ஆரம்பித்தார்கள. அவ்வளவுதான், கொஞ்ச நாளில் பட்டணம் கலகலத்து