பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 65

"குழந்தைக்கு ஹார்விக்ஸ் வேனும், அதுவேனும் இதுவேனும்' என்பாள்.

'நான் அப்படி ஹார்லிக்ஸில் வளரவில்லையே!”

'நீங்கள். பிறந்தாப்போல் நம் குழந்தை பிறக்க வில்லையே! நம்ம காலமே வேறே, நம் குழந்தை காலமே வேறு”

'நன்றாய்க் காலத்தின் மேல் பழியைப் போட்டாய்! எத்தனை அகமுடையான் பெண்டாட்டி இம்சை தாங்க முடியாமல் ஒடியோ, செத்தோ போன பிறகு அவன் குழந்தைகள் வளரவில்லை! அதுகள் எல்லாம் ஹார்லிக்ஸ் இல்லை, ஒவல்டின் இல்லை என்று வாயைப் பிளந்து விட்டனவா?’’

'உங்களுக்கு இது மாதிரிதான் பேசத் தெரியுமா? இல்லாட் டா.........” -

'இதோ பார், நம்மிடத்தில் ஒன்று வைத்துக்கொள். எந்தெந்தச் சமயத்தில் எந்தச் சாமான் சுளுவாயும் மலிவாயும் கிடைக்கிறதோ, அதுதான், குழந்தையா னாலும் சரி, பெரியவர்களானாலும் சரி. நான் வாங்கிக் கொடுக்கக்கூடிய சாமான். நீ அதை மருந்தென்று வைத்துக் கொண்டாலும் சரி, ஊட்டமென்று கொண் டாலும் சரி. அதுக்குத் தகுந்தாற்போல், அதைச் சாப்பிடு பவர்கள் வளர்ந்தது போதும். உனக்கு ஒரு கதை தெரியுமா?-' - -

பாருவுக்குக் கதை கேட்கப் பொறுமை இராது. கதவுகள் படாரென மூடும், திறக்கும். மாது அடிக்கடி சொல்வான். 'உன்னைப் பார்த்தால் எனக்கு, அசூயையாயிருக் கிறதப்பா? பெண்டாட்டி பிள்ளையென்று ஒரு பிடுங்கல் உண்டா? பெரியவர்களெல்லாம், பேரனைப் பார்க்க வேண்டும், பேத்தியைப் பார்க்கவேண்டும் என்று

த்வனி-5