பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 6? வர்களெல்லாம் அவரவர் வேலைகளைச் செய்யும் வெளிப் பாவனையிலேயே ஒரு புது உஷார். மூன்று நாட். களாய்த் தெரு விளக்கு எரியவேயில்லை.

இந்தப் புது ஜரூரையெல்லாம் கண்டவுடன் பாரு வுக்கு வயிற்றில் இன்னும் புளியைக் கரைத்தது. மாதுவின் தாயார் கண்டிப்பாய்த்தான் ஊர்ப் போய்ச் சேர வேண்டும் என்று கெடுபிடி பண்ண ஆரம்பித்தாள்.

"நான் சாகனும்னு இருந்தால், நம்மூரிலேயே நான் செத்துப்போறேன். இங்கே இந்த அனாசாரப் பட்டனத் திலே மாட்டிண்டு குண்டு பட்டுத் துர் மரணமானாள் என்று நாலு பேர் பேசிண்டாக்கூட, என் ஆவிக்குக் கேட்கச் சகிக்காது...'

ஆகையால் மாது மறுநாள் காலை அவன் வீட்டு மனுஷாளை ஊர்போய்ச் சேர்த்துவிடப் போகிறான். 'இதுகளைத் தொலைத்துவிட்டு வந்தால்தான், நம் வேலையை நிம்மதியாய்க் கவனிக்க முடியும்...”

எப்படியிேருந்தாலும் மாது கெட்டிக்காரன். அப்பா இப்பொழுது உயிரோடிருந்தால், மாதுவை மெச்சிக் கொள்வார், 'கெட்டிக்காரன், பிழைக்கிற பிள்ளை' யென்று.

பருந்து பறந்துவிட்டதா, இருக்கிறதா என்று இப்பொழுது பார்க்க முடியவில்லை, யோசனையின் மும்முரத்தில் இரவு நேர்ந்தது கூடத் தெரியவில்லை.

பெருமூச்செறிந்துகொண்டு உள்ளே சென்றான். அறை மூலையில் சுருட்டி வைத்திருக்கும் படுக்கைமேல் இடுப் பொடிந்த மாடாய்ச் சாய்ந்தான்.

நினைவு அப்பாவைத் தொட்டதும், அவரையே தொடரத் தலைப்பட்டது மனக் கண்முன் அவர் உருவம் எழுகிறது. எண்ணுகிற தினுசில் விலா எலும்புகள் தெரிய நலிந்த உடல் சாய்வு நாற்காலியில் சாய்ந்த வண்ணம், தான் நல்லபடியாய் இருந்த நாளை யெல்லாம் எண்ணி