பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி யூகம் ? 5

அம்மா ; அது எப்படித்தான் நடக்குமோ ? எனக்குத் தெரியாதம்மா ஆனால் நடந்தாகணும்.’’ என்கிறாள் ஒருத்தி தோளைக் குலுக்கிக்கொண்டு,

"ஏம்மா, ஒரு முப்பத்தஞ்சு ரூபாய்க்குக்கூட கொறைஞ்சு புடவை எப்படிக் கட்டறது ? என்று இன் னொருத்தி ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே மூக்கைச் சுருக்குகிறாள். திடீரென்று அவளுக்குப் பிறந்த வீட்டு வாசனையே புதிதாயும் ஆகாததாயும் இருக்கிறது.

பேச்சு மாத்திரம் இவ்வளவு வறட்டு ராங்கியாயிருந்த போதிலும், இன்னமும் இங்கு மிச்சமும் மீதமுமாய் இருப்பதை வாரிச் சுருட்டிக் கொண்டு போவதில் ஒருத்திக் கொருத்தி தோற்றவளாயில்லை.

'அம்மா எனக்கு இந்தத் துருவலகாயைக் கொடேன்' 'ஏனம்மா, இது ஒடிஞ்சிருக்கே, அத்தோடே இது ஒண்ணுதாணிருக்கு”

'பரவாயில்லை- நீ புதுசா வாங்கிக்கோ " அதற்குள் இன்னொருத்தி : உனக்கென்ன குறைச்சல், இனிமேல் அண்ணாவும் நீயும் மாத்திரம்தானே? அண்ணா உனக்கு வாங்கித்தரான். அதைவிட அவனுக்கென்ன வேலை ?”

ஏன் இப்படி மாறுகிறார்கள் ? மாடிப் படியேறி யாரோ வரும் சப்தம். ஒரு ஆளின் வடிவம் அறை வாயிலை அடைத்தது.

'உள்ளே ஒருத்தருமில்லையா? யாரோ நடமாடினாப் போல இருந்ததே !”

"நான் தான்” "மல்லியா விளக்கைப் போடாமல் இருட்டில் என்ன பண்ணறே ? என், சாப்பிட வரல்லே ? எல்லாரும் சாப்பிட்டாச்சே '!