பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 7?

  • சரிதாம்மா போம்மா-” -

பாருவுக்கு எல்லாமே அப்பொழுது சரிதாம்மா போம்மா’தான். ஒன்றும் சட்டை செய்ய மாட்டாள்.

வெறும் மேனி வளர்ச்சியே ஒரு வசீகரமாய் அவள் மேல் கவிய, அவள் மனத்தில் அவள் தன்னை மறந்து எவ்விதமான சிந்தனையுமற்றுத் திரிந்தாள். சுயமான அழகு அவளுக்கு இல்லாவிடினும் அவளைச் சூழ்ந்த அவ்வுன் மத்தமே அவள் முகத்திற்கும் செயல்களுக்கும் ஒரு கவர்ச்சியைத் தந்தது. அக்கவர்ச்சியைக் காண முடியாத வர்களுக்கு அக்கவர்ச்சியே அருவருப்பாயும் அமைந்தது. அவள் வளர்வதை அவள் அம்மையும் மற்றவர்களும் கரித்தார்கள் என்றுகூடத் தோன்றியது.

'குதிர் மாதிரி, பெண்ணை வச்சிண்டு இன்னமும் பிள்ளை தேட நாளா கல்லையா?”

அவள் உடலின் மீறின வாளிப்பில், சாதாரணமாய் வெறும் சட்டையும் பாவாடையும் அணியும் பருவத் திலேயே தாவணி போர்த்தும் அவசியம் நேர்ந்துவிட்டது. அதையொட்டினாற் போலேயே புடைவையுடுத்தும் கட்டாயமும் ஏற்பட்டு விட்டது.

'இனிமேல் நீ கொஞ்சம் கட்டு திட்டமாய் இருக் கனும் பாரு; கண்டவாளோடே பேசிண்டு, நீ நினைச்ச படி வந்துண்டும் போயிண்டும் இருக்க முடியாது-”

'சரிதாம்மா போம்மா...”

சில சமயங்களில் நமக்கு வாழ்க்கையில் சில சம்ப வங்கள் நேரிடுகின்றன. சந்தோஷமாயிருக்கலாம், அல்லது. துக்ககரமாயுமிருக்கலாம், ஆயினும் அவை நம்க்கு மாத்திரம் ஏற்படுத்தும் ஒரு உள்ளக் கிளர்ச்சிக்காக, மற்ற சம்பவங்களைப்போல் மறந்து விடாது. மற்றவர் களுக்கும் காட்டாமல் மனத்தில் நினைவுப் பேழையுள் பத்திரமாய்ச் சேமித்து வைப்பதில் நமக்கு ஒரு அலாதி திருப்தி. பிறகு, சாவகாசமாய் ஏழைக் கருமி தனக்