பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 7;

பொறித்த ப்ரிண்ட் புடவை அவன் பார்வை ஏதேச்சை யாய் புடவையிலிருந்து ஜலத்தின் மேல் நழுவியது. ஒடும் ஜலத்தில் ஒருத்தி குளித்துக்கொண்டிருந்தாள். அவனை அவள் இன்னமும் காணவில்லை. ஆனந்தமாய் தன்னை மறந்த வெறியில் திளைந்து கொண்டிருந்தாள். மார்புள்ளிருந்து தொண்டை வரையில் ஏதோ கிளம்பி உள்ளேயே வெடித்தது. முட்டை வெடித்து குஞ்சு வெளி வந்தது போல், ஏதோ படபட வென்று மார்புக்கும் தொண்டைக்குமாய் இறக்கையடித்துக் கொண்டது. திடீரென்று அவனுள், இப்படிப் பொறுக்க முடியாத இன்பத்தைக் கொடுத்துக்கொண்டு துடிப்பது என்ன? ஏதோ ஜீவ ரகசியத்தின் எல்லையில் மனம் தளும்பிக் கொண்டு நிற்பதுபோல் ஒரு உணர்ச்சி. இன்னமும் பல மாய் ஒரு தளும்பு தளும்பினால், அவ்விரகசியத்துக் குள்ளேயே விழுந்து விடுவான், அப்பொழுது அவ்விரக சியம் இன்னதென்று அவன் அறிவான் எனினும், மற்ற வர்களுக்குத் .ெ த ரி வி க் க இயலுமோ இயலாதோ? ஏனெனில் அவன் அப்படிக் கண்டுபிடிக்க முடிந்தால் அவன் கண்டுபிடித்த ரகசியத்துக்குள்ளேயே மூழ்கிவிடு வான் ஏதோ ஒன்று எட்டியும் எட்டாமல் அவன் மனப் பிடிப்புக்கு ந ழு வி, அ வ ைன ஏய்த்து அவனுடன் விளையாடுகிறது. -

பாரு என்ன பரையாகிவிட்டாளா? உலகின் ஆதிப் பெண்ணாக மாறிவிட்டாளா? உருவழிந்த பின்னர் நிற்கும் அதன் அர்த்தமா யில்லாமல் உருவுடனேயே பொலியும் அர்த்தமா அவள் இப்பொழுது; அல்லது அர்த்தத்தினுடைய உருவா!

சுற்றும் முற்றும் நோக்குகையில் ஒரு பக்கம் மரங்கள், எதிரே திட்டுத் திட்டாய் மணல் மேடுகள், வயல்களில் நெற் கதிர்கள் ஒன்றுடனொன்று உராய்ந்து பேசும் ரகசியங்கள் காற்றில் மிதந்து வருகின்றன. களத்து மேட்டில் ஒரு வைக்கோல் போர் தெரிகிறது. தோப்பு களினிடையில் கோவில் ஸ்தூபி எட்டிப் பார்க்கிறது.