பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 忍?

அவள் வீட்டிற்கு விலக்கு அவன் கைகளில் ஒரு கம்பளி மூட்டையை ஏந்தினாற்போல் மார்பேர்டு சேர்த்து அனைத்துக் கொண்டிருக்கிறான். அம் மூட்டையிலிருந்து ஒரு சிறு முகம் எட்டிப் பார்க்கிறது. பாருவின் குழந்தை. அதற்கு மாந்தம் கண்டிருக்கிறது. அதன் மேலிருந்து கிளம்பும் வேப்பெண்ணெய் நாற்றம் குடலைக் குமட்டு கிறது. ஆயினும் தன் உஷ்ணத்தை அதற்குக் கொடுத்து அதற்குக் குறைந்து போய்க்கொண்டிருக்கும் உஷ்ணத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறான். இப்படியெல்லாம் காப்பாற்றும் உயிர்கள் பின் எப்படி எப்படியோ

தி டி. ரெ ை, ஆர்மோனியத்தில் ஒ ேர ட ல் ைல அமுக்கினாற் போல் சங்கு நேர்ச் சப்தத்துடன் அபாயம் நீங்கியதற்கறிகுறியாய் ஒலிக்கிறது. மறுபடியும் வாழ்வில் நம்பிக்கை, உயிர்ப்பயம், சபலம் எல்லாம் அலைபோல் எழுந்து மோதுகின்றன. -

ஊஹூம், இந்த வியூகத்திலிருந்து தப்புவதற்கே வழியில்லை. கடைசி வரையில், இதோ இப்பொழுது தப்பித்தோம், தப்பித்தோம் என்று நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டே, அங்கு ஓடி இங்கு ஓடி, ஆனால் வியூகத் தினுள்ளேயே ஒடி, ஒடி அதனிலிருந்து தப்பாமலேயே, அதனுள்ளேயே மடியப்போகிறோம், நம்பிக்கையிருக்கும் வரையில் வாழ்வு, வாழ்வு இருக்கும் வரை நம்பிக்கை யென்றிருக்கும் வரையில், நாம் இதிலிருந்து தப்புவதேது? யானை விலை, குதிரை விலையில் மாது இரண்டு ஜட்கா வண்டிகளைப் பேசிக்கொண்டு வந்தான்.

ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் வழியில் ஒரு பசும் புல்தரை தென்படுகிறது. ஒன்றிரண்டு பசுக்கள் சாந்த மாய் மேய்ந்து கொண்டிருக்கின்றன. இந்தவிடத்தில் குண்டு விழுந்திருந்தால்-? *

ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் விழி பிதுங்குகிறது என்னென்ன பராக்கிரமங்களோ புரிந்து மாது டிக்கட்டு