பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 லா. ச. ராமாமிருதம்

படீர் சத்தம் கேட்டு, நான் கேட்டால், இப்பதான் சுக்கு வெள்ளம் குடிக்கப் போனேன்னு சிரிப்பார். நான் சொல்றதுதான் பதில்.

பதிலைச் சோதித்தால் உங்களுக்குத்தான் தொந்தரவு என்று அந்தச் சிரிப்புக்கு அர்த்தம். அவர் சிரிப்பில் எனக்கு எப்படியோ ஒரு மயக்கம் கண்டுபோச்சு. பல் என்ன வரிசை தேங்காய் உடைச்சாப்போல என்ன வெண்மை: இத்தனைக்கும் துலக்குவதுக்கு சாம்பல்தான். எனக்கே தெரியும் அப்படியே கூப்பிட்ட குரலுக்குச் சமயத்துக்குக் கட்டடத்துல இருந்தா குறட்டையைக் கேட்டபின் கலைக்க மனசு வருவதில்லை. இத்தனையும் தாண்டிப் பதில் கொடுத்துப் படியேறி அவர் வரப்போதான் எனக் குப் பயம். பார்டர் வாடை, புரட்சிகளே எத்தனை நடந் திருக்கின்றன அதே சாக்கில்.

ஐயா மார்களே, நான் ஊருக்கு வந்த புதுசில் ஐயா வைப்பத்தி கதையெல்லாம் கேட்டிருக்கேன். ஆயுசு காலத் திலேயே கதாநாயகன் ஆவது சாதா அல்ல என் கண் னாலேயே பார்த்தேன். இந்த ஊரில் மதவெறிக் கலகத் தில் இந்த வட்டாரத்துக்குப் பலத்த கட்சி, கடைத்தெரு வுக்குத் தீ வைத்து சூறையாடினப்டோ, ஐயாவின் தீரமும், தைரியமும், அமைதியும், வாசல்லே அவர் நின்னிருந்த உய

-

ரமும் சொல்லப்போமா ?

நான்தான் பிராம்மணன் தொடை நடுங்கி, வயத்தில் நெருப்பைக் கட்டிண்டிருந்தேன்.

'ஐயா, கவலையே படாதீங்க. என்னைத் தாண்டித் தான் நீங்க. என்னைத் தாண்டிடுவாங்களா? நடந்த தென்னவோ அப்படித்தான் ஊரே பத்தி எரிஞ்சது. (இதென்ன நான் சொல்லறது. உங்கள் ஊரைப்பத்தி உங்களுக்கே- பத்தவெச்சதும் நீங்கதான், அணைச்சதும் நீங்கதானே!) இது அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அடிக் கிற காத்தாமே. அப்படித்தானா!-வாச்மேன் ஐயாவைத் தாண்டறத்துக்கு ஆள் ஏது? இது தவிர அவருக்கு ஆடை