பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

வியா : அப்படித்தான் இருக்க வேண்டும். இந்த ஆந்தை வளர்ப்புத்தாள் நன்ருக இல்லை. சரி, சரி, எல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ போய்க் களைப்பாறு. ஒரு தேர்தல் கூட்டம் நடக்கிறது. நான் அதைப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். இதோ பார், செவ்வாயி! மாப்பிள்ளைக்கு, அது தான் உன் மருமகனுக்கு வேண்டிய வசதிகளை யெல்லாம் செய். . செவ் , அதுக்கென்னங்க உங்கள் அக்காள் மகனுக்கு இல்லாததா? - - சனி இருக்கட்டும், இருக்கட்டும். (வியாழனுரைப் பார்த்துப் பையைக் கொடுத்து) மாமா இதிலேதான் என் சாத்திரம், புத்தகமெல்லாம் இருக்கின்றன. இதைப் பத்திரமாக வைத்திருங்கள். யாரிடமும் கொடுத்து விடாதீர்கள். வியா : அதுக்கென்ன ? என் பெட்டியிலேயே வைத்துப் பூட்டி விடுகிறேன். சமயத்தில் நீயே வந்து கேட் டாலும் கொடுக்க மாட்டேன். அது சரி, இங்கே பாரப்பா, இது உன் வீடுபோல : ஒளிவு மறைவு இல்லாமல் பேசிப் பழகு. நான் இதோ வந்துவிடு கிறேன். வந்து எல்லாம் பேசிக் கொள்கிேறன் இந்த ஆந்தையை எங்கே விடுவாய் ? *

ಆಗಿ : அது என்னுடனே இருந்துவிடும் மாமா.

(வியாழனுர் வெளியே போகிருர்)

செவ் , தம்பி எங்கே சாப்பிட்டு வந்தீர்கள் ?

கிறை : என்னம்மா அப்படிக் கேட்கிருய் ? அவர் மாயூ

ரத்திலேயே சாப்பிட்டு வந்திருப்பார்.

சனி இல்லை, இல்லை. -

செவ் : திருவருகில் சாப்பிட்டிருப்பீர்கள், !