பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

நடந்து காெண்டே இரு!




காலிங்பெல் இருக்கையிலே, நமையழைக்கக்
கதவிடிக்கும் 'அம்மாமி' 'அறிவா' இனினும் ?
'ஸீலிங்'கே சட்டமதாய் வந்த பின்னும்
'திருநாளைப் போவா'ராம் நந்த னார்தான்
கோலுான்றிச் செஞ்சுருட்டிப் பாட்டுப் பாடிக்
கோபிக்கும் வேதியரைக் கெஞ்சு வதையே,
நாலுமுறை வந்துவிட்ட 'லைலா - மஜ்னு'
'நைந்த கதை' காட்டுவதா, கலைவ ளர்ச்சி ?


வருந்துகின்ற 'சம்காரக்' கதைகள் வேண்டாம்!
மகுடகுல 'அலங்கார'க் கதைகள் வேண்டாம்!
'திருத்துகின்ற' 'பிரச்சார'க் கதைகள் வேண்டாம்!
'தேடுகின்ற' 'சஞ்சாரக்' கதைகள் வேண்டாம்!
'பொருதுகின்ற' 'சிங்கார'க் கதைகள் வேண்டாம்!
'புரளுகின்ற' 'சிருங்கார'க்கதைகள் வேண்டாம்!
‘எருது, புலி, நாய், சிங்கம்' காட்சிவைக்கும்
இளிக்கின்ற 'கூடாரக்' கதைகள் வேண்டாம்!