பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

விந்தன்


ராதாவைக் கொண்டாங்கிறாங்களே, என்.எஸ்.கே.ய்க்கு நான் என்ன பதில் சொல்வேன்?"கிற கவலை அவருக்கு; குப்புசாமிச் செட்டியாருக்கோ ‘புதுசா வாங்கிப் போட்ட நாற்காலிகளெல்லாம் தூள் தூளாகிறதே’ங்கிற கவலை.. என்ன செய்வார், பாவம்!..'கிடக்கிறார் பொன்னுசாமிப் பிள்ளை'ன்னு என்கிட்டே வந்தார். ஜனங்க சொல்றாப்போல ஒரே ஒரு சீனிலாவது வந்து நீ நடிச்சிடப்பா!’ ன்னார். நான் அதுதான் சமயம்னு, ‘ஒரு நிபந்தனை'ன்னேன்; என்ன நிபந்தனை?'ன்னார். ‘நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய இருநூறு ரூபாயை ரைட்ஆப் பண்ணிடணும்’ னேன். ‘சரி'ன்னார். அதுக்கு மேலேதான் நான் போய் அந்த ஒரு சவுக்கடி சீன்லே மட்டும் நடிச்சிட்டு வந்தேன். ஜனங்களுக்குப் பரம திருப்தி, ராதாவுக்கு ஜே ன்னு கத்திக்கிட்டே கலைஞ்சிப் போயிட்டாங்க...”

“இதெல்லாம் என்.எஸ்.கே.யின் மனத்தை மாற்றியிருக்குமே?”

“அதான் இல்லே, அப்பவும் அவர் தன் பிடிவாதத்தை விடாம கே.பி. காமாட்சியை எனக்குப் பதிலாப் போட்டு ‘இழந்த காதல்’ படத்தை எடுத்தார்....”

“எங்கே ?”

“கோயமுத்துார் சென்ரல் ஸ்டுடியோவிலே. அப்போ யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை கம்பெனி சிங்காநல்லூரிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தது; நானும் நடிச்சிக்கிட்டிருந்தேன். திடீரென்று ஒரு ஜப்தி...”

“எதற்கு?”

“நாடகக் கம்பெனிக்காரனுக்கு ஜப்தி வருதுன்னா, அது மளிகைக் கடைக்காரன் கிட்டேயிருந்துதான் வரும். ஏன்னா, அவன் கிட்டே வாங்கித் தின்கிற கடனையே அவனாலே சில சமயம் கொடுக்க முடியறதில்லே...”

“அப்புறம்?”

“அடுத்த நாள் காலையிலே அந்தக் கடைக்காரன் கோர்ட் அமீனாவோடு வந்து நாடகச் சாமான்களை