பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

விந்தன்


“யார் அவர்கள்?”

“ஒருவர் பெரியார்; இன்னொருவர் என்.எஸ்.கே...”

“அந்த அளவுக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து வைத்திருக்கும் அவரையா நீங்கள் சுட்டுத் தள்ள வேண்டுமென்று நினைத்தீர்கள் ?”

“அது வேறே விஷயம், இது வேறே விஷயம்...ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு வித்தியாசம்...”

“அது என்ன வித்தியாசம் ?”

“பெரியார் காசு விஷயத்திலே கருமி, கருத்துக்களை அள்ளிக் கொடுக்கறதிலே வள்ளல்...என்.எஸ்.கே. அதற்கு நேர் விரோதம்...காசையும் அவர் அள்ளிக் கொடுப்பார். கருத்தையும் அள்ளிக் கொடுப்பார்...”

“அப்படிப்பட்டவர் உங்களுடைய புகழைக் கொள்ளையடிக்க விரும்புவானேன்?”

“அதுதான் எனக்குப் புரியல்லே, அதைத் தாங்கத்தான் என்னாலே முடியல்லே...அதுக்காக என்.எஸ்.கே.யைச் சுடறதுக்கு நான் ‘பிளான்’ போட்டுக்கிட்டிருக்கிற விஷயம் எப்படியோ பொன்னுசாமிப் பிள்ளைக்குத் தெரிஞ்சுப் போச்சு...அவர் சும்மா இருப்பாரா?...உடனே ஓடிப்போய் என்.எஸ்.கே.கிட்டே விஷயத்தைச் சொல்லிட்டார்...”

“அப்புறம் ?”

“பிள்ளை பயந்த அளவுக்கு என்.எஸ்.கே. பயந்துடல்லே; காரை எடுத்துகிட்டு நேரா கரூருக்கு வந்தார். அப்போ நானும் சம்பங்கியும் அங்கேதான் நாடகம் போட்டுக்கிட்டிருந்தோம்.என்.எஸ்.கே. வரப்போ நான் மாடி அறையிலே இருந்தேன்..அவர் வந்ததும் என்னையும் அறியாம நான் எழுந்து நின்னேன்...எடுக்கும்போதே அவர், ஏண்டா, உனக்குப் புத்தி இருக்காடா ?ன்னார். அப்போத்தான் என் புத்திமேலேயே எனக்குச் சந்தேகம் வந்தது. இருந்திருந்தா, சுடறவனையே தேடி வர இந்த ஆளைச் சுடறதுக்கு நான்