பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

விந்தன்


“யார் அந்தக் கொட்டகைக்காரர்?”

“இன்னிக்கு என் வணக்கத்துக்குக்குரிய பெரியாராயிருக்கும் ஈ.வெ.ரா. அவர்கள்தான் அந்தக் கொட்டகைக்காரர்!”

“அப்படியா? அவர் என்ன சொன்னார் ?”

“முதலில் ரூபாய் இருநூற்றையும் எண்ணிக் கீழே வை; அப்புறம் மற்றதைப் பற்றிப் பேசுன்னார்...”

“நீங்கள் என்ன சொன்னீர்கள் ?”

“நான் சாதாரண நடிகன், நீங்கள் சமூகத்தையே சீர்திருத்த வந்திருக்கும் தலைவர்னு ஆரம்பிச்சேன்... அவ்வளவுதான்: ‘அது வேறே கதை, இது வேறே கதை. கொண்டா பூட்டை!ன்னார் பக்கத்தில இருந்த ஆளிடம். ‘அடியேன் சாமி!ன்னு அவன் ஒரு பூட்டுக்கு ரெண்டு பூட்டாக் கொண்டு வந்து கொடுத்தான். அத்தனை சாமான்களையும் உள்ளே எடுத்துப் போட்டுப் பூட்டி, “என்னிக்கு இரு நூறு ரூபாயைக் கொண்டு வந்து கொடுக்கிறியோ, அன்னிக்கு உன் ‘சாமான்களை நீ எடுத்துக்கிட்டுப் போ'ன்னு சொல்லிட்டார். அதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியாம, நான் வெறுங்கையோடே கோபிச்செட்டிப்பாளையத்தை நோக்கி நடந்தேன்."