பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

109


17. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன்

“வாழ்க்கையிலே எத்தனையோ மேடு பள்ளங்களிலே ஏறி இறங்கியவன் நான். பெரியார் போட்ட பூட்டு என்னை என்ன செய்யும்? அதையும் எப்படியோ சமாளிச்சேன். அடுத்தாப்போலக் குமாரபாளையத்திலே எங்க நாடகம் நடந்துக்கிட்டிருந்தது. கூட்டமாவது கூட்டம், சொல்ல முடியாத கூட்டம். ஒரு நாளைப்போலக் கொட்டகை நிரம்பி வழிஞ்சிக் கிட்டிருந்தது...”

“புதிய நாடகமா?”

“இல்லே, பழைய நாடகம்தான்; அதே ‘இழந்த காதல்’ தான். ஆனா ஒண்ணு.”

“என்ன ?”

“நான் பேசற நாடக வசனங்கள் அப்பப்போ மாறிக்கிட்டிருக்கும். அந்த வசனங்களிலே அப்டுடேட் அரசியல் விமரிசனங்கள் இருக்கும். ‘கரண்ட் பாலிடிக்'ஸை வைச்சிக்கிட்டு என் கருத்துக்களை நான் துணிஞ்சிச் சொல்வேன்...”

“அந்தக் காலத்து ஜனங்களுக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது போல் இருக்கிறது...”

“அந்தக் காலத்து ஜனங்களுக்கு மட்டும் இல்லே, எந்தக் காலத்து ஜனங்களுக்கும் அது பிடிக்கும். ‘கலை கலைக்காகவே'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப்