பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

விந்தன்


போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது... என் வெற்றிக்கு அதுவே காரணம்.”

“சரி, அப்புறம் ?”

“ஒரு நாள் எக்கச்சக்கமான கூட்டம். திரை மறைவிலே நான் மேக்அப் போட்டுக்கிட்டிருந்தேன். தியேட்டர் மானேஜர் இரைக்க இரைக்க ஓடி வந்து, ‘பெரியார் வந்திருக்கார், அண்ணாதுரை வந்திருக்கார், சம்பத் வந்திருக்கார்’னு மூச்சு விடாம சொல்லிக்கிட்டே போனார். ‘எதுக்கு ?ன்னு கேட்டேன்; ‘உங்க நாடகத்தைப் பார்க்கணுமாம்'னார். ‘பார்க்கட்டுமேன்னேன்,'ஒரு சீட்கூடக் காலியில்லையே, எப்படி அவர்களை உட்கார வைக்கிறது ?ன்னார். அவர்களுக்கு இஷ்டமிருந்தா தரையிலே உட்கார்ந்து பார்க்கட்டும்; இல்லேன்னா போகட்டும்'னேன். மானேஜர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்; ‘ரொம்பப் பெரியவங்க அவங்க'ன்னார்; இருக்கலாம்; என்னைவிடப் பெரியவங்களா வேறே யாரையும் நான் நெனைச்சுக் கூடப் பார்க்கிறதில்லையே!ன்னேன். அதுக்கு மேலே அவர் அங்கே நிற்கல்லே; போயிட்டார்.”

“பாவம், அவருக்கு ஒரே ஏமாற்றமா யிருந்திருக்கும்...”

“அதுக்காக நானும் கவலைப்படல்லே, வந்தவங்களும் கவலைப்பட்டதாத் தெரியல்லே, அவர் சொன்ன மூணு பேரும் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டுத் தரை டிக்கெட்டிலேயே உட்கார்ந்து கடைசி வரை என் நாடகத்தைப் பார்த்தாங்க. அதோடே நிக்கல்லே, என் அழைப்பை எதிர்பாராமலே இண்டர்வ'லிலே மேடைக்கு வந்து என்னையும் என் நாடகத்தையும் பாராட்டிப் பேசினாங்க. நான் நினைக்கிறேன், ஒரு கட்சியை வளர்க்கணும்னா அதுக்குக் கலைஞர்களுடைய ஒத்துழைப்பும் தேவைங்கிற விஷயமே அன்னிக்குத்தான் அண்ணாதுரை மனசிலே உதயமாகியிருக்கும்னு. அது மட்டும் இல்லே, ‘தி.க.மாநாடு நூறு நடத்தறதும் சரி, எம்.ஆர்.ராதா நாடகம் ஒண்ணு நடத்தறதும் சரி'ன்னு அவர் சொன்னதுகூட