பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

விந்தன்


ஏழுமலையானைப் பிடிக்கலேன்னாலும் அவனுடைய பிரசாதங்களைப் பிடிக்குமோ இல்லையோ?'ன்னார். ‘உங்க கையாலே எனக்கு விஷத்தைக் கொடுத்தாலும் பிடிக்கும்’ னேன் நான். ‘பொழைச்சிக்குவேடா’ ன்னு சிரிச்சுக்கிட்டே பிரசாதத்தைக் கொடுத்தார்; வாங்கிக்கிட்டுத் திரும்பினேன். அப்போ நான் திருப்பதியிலே திருடின சமாசாரம் ஒண்ணு நினைவுக்கு வந்தது. அதையும் அய்யர்கிட்டே சொல்லி விட்டுப் போயிடலாம்னு திரும்பினேன்...”

“என்னதான் நல்லவராயிருந்தாலும் ஒரு ஜட்ஜ்கிட்டே எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாதுங்கிறது, இல்லையா?”

“எனக்கு அப்போ இருந்த சந்தோஷம் அப்படி! இப்போ நீங்க சொன்ன நியாயம் எனக்கும் அப்போ திடீர்னு தோணவே, ‘இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்னு பேசாம வந்துட்டேன்!” என்று ராதா சற்று நிறுத்தி, “எனக்கு ஒரு சந்தேகம்...” என்று இழுத்தார்.

“என்ன சந்தேகம்?” என்றேன்.

“இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் நான் வெளியே சொல்றதாலே அய்யருடைய பெருமை குறையுமா?”

“ஏன், அவர் இன்னும் ஜீவியவந்தராயிருக்கிறாரா?”

“எங்கே இருக்கிறார் ? அப்படிப்பட்ட அபூர்வ மனுஷருங்களெல்லாம் தான் இந்த உலகத்தை விட்டுப் பொழுதோடு போயிடறாங்களே! “ +

“போயிருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் அவருடைய பெருமைக்கு எந்தவிதமான இழுக்கையும் தேடி வைக்காது. அப்படி ஓர் உத்தமரை இப்போதெல்லாம் எங்கே பார்க்க முடிகிறது?” என்றேன் நான்.

“என் கவலை இதுதான். இதனாலே என்பெருமை குலைந்தாலும் அவருடைய பெருமை குலையக் கூடாது