பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

விந்தன்


“ஆமாம், இருந்தான்...”

“அவன்கூட அந்த வெறி பிடிச்சி அலைஞ்சவன்னு உங்களைப் போன்றவங்க சொல்ல, நான் பின்னால் கேட்டேன். ஒரு ஆண் மேலே இன்னொரு ஆண் மோகம் கொள்வதும், அவனோடு இயற்கைக்கு விரோதமான வழியில் உடலுறவு வைத்துக் கொள்வதும் நினைத்துப் பார்ப்பதற்கே அருவருப்பாயில்லே? இந்த அருவருப்பான காரியத்துக்காக அந்த நாள் நாகப்பட்டினத்துக் கனவான்களில் சிலரும், சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த கனவான்களில் சிலரும் லட்சக் கணக்கில் செலவழிக்கத் தயாராயிருந்தனர். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகளில் பல அந்த நாளில் அவர்களுக்கு ஆள் பிடிச்சிக் கொடுப்பதற்காகவே நடந்து வந்தன. யாராவது ஒரு பையன் கொஞ்சம் அழகாயிருந்து, அவன் பாலகிருஷ்ணன் வேஷமோ, பாலமுருகன் வேஷமோ போட்டுக்கிட்டு மேடைக்கு வந்து நின்னாப் போதும், நான் சொன்ன கனவான்களில் யாராவது அந்தப் பையன் சம்பந்தப்பட்ட கம்பெனி முதலாளியுடன் பேரம் பேசி, அவனுக்காக அவர் கேட்கும் தொகையைக் கொடுத்து, அன்றிரவே அவனைத் தூக்கித் தன் காரிலே வைச்சி, ஊருக்குக் கொண்டு போயிடுவார். அப்புறம் அவன் கதி அதோகதிதான். பாலகிருஷ்ணன், பால முருகன் வேஷம் போட்ட பயல்களுக்கே இந்தக் கதின்னா, பொம்பளை வேஷம் போட்ட பயல்களின் கதியைப்பத்திக் கேட்கவாவேனும் ? அவங்களிலே ஒருத்தனைக்கூட யாரும் ஒழுங்கா இருக்க, ஒழுங்கா வாழ விட்டதே இல்லே. நானும் அந்த ஒழுங்கீனமான காரியத்தைச் செய்யறதிலே ஒருத்தனாத்தான் இருந்தேன். எனக்கும் அப்போ பொம்பளை மோகம்னா என்னன்னே தெரியாது; ஆம்பளை மோகம்தான் தெரியும். அந்த மோகத்திலேதான் எத்தனை காதல், எத்தனை ஊடல், எத்தனை சண்டை, எத்தனை தற்கொலைகள், எத்தனை சொல்லிக்காம ஓடிப்போற ஜோடிகள்...எல்லாம் வேதனையோடு கூடிய வேடிக்கைதான், போங்கள்; அதன் பலனாகச் சக தோழர்களில் சிலர் இன்னிக்கு மகப் பேற்றுக்குக் கூட லாயக்கற்றவர்களாகப் போய் விட்டதைப் பார்க்கிறப்போ என் நெஞ்சே வெடிச்சிடும்போல இருக்குது..."