பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

163


“அப்படியானால் பிரேமாவைப் பேச வைத்து அழகு பார்த்த நீங்கள், ஆட வைத்தும் அழகு பார்த்திருப்பீர்களே ? ஆனால் அதைப் பக்திக் கண்ணால் பார்த்திருக்க மாட்டீர்கள், இல்லையா,”

“காதலும் ஒரு பக்திதானே ? எத்தனை பக்தருங்க கடவுள்மேலே காதல் கொண்டு பாடியிருக்காங்க!”

“ம், அப்புறம்?”

“அப்புறம் என்ன ஆச்சுன்னா, என் பிரேமாவுக்குத் திடீர்னு ஒரு நாள் காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சது. டாக்டரை வரவழைச்சிக் காட்டினேன். அவர் வந்து பார்த்துட்டு, ‘இது சாதாரண ஜூரம் இல்லே, அம்மை ஜூரம், இதுக்கு இப்போ மருந்து கொடுத்துப் பிரயோசனமில்லே, முந்தியே வாக்சினேஷன் சேஞ்சிருக்கணும்னு சொல்லிட்டுப் போயிட்டார். அவர் சொன்னபடி மூணாவது நாளே அம்மை போட ஆரம்பிச்சிடிச்சி. பத்தாவது நாள் அவ என்னை விட்டுப் போறேன்னு போயிட்டா!”

“இப்படி ஒரு சோகம் உங்கள் வாழ்க்கையில் நேர்ந்திருக்க வேண்டாம். பிறகு.?”

“அவளை நான் எல்லாரையும் அடக்கம் செய்யறாப் போல சாதாரணமா அடக்கம் செய்ய விரும்பல்லே; அவளுக்கு ஒரு கலைக் கோயிலே எடுக்கணும்னு நினைச்சேன். நினைச்சபடியே’ கோயமுத்துரிலிருந்த ராஜா சாண்டோ சமாதிக்குப் பக்கத்திலே அவளை அடக்கம் சேஞ்சி, அந்த இடத்திலே இருபது.அடிக்கு இருபது அடி வைச்சி ஒரு கலைக் கோயில் கட்டினேன். ஜி.டி. நாயுடு வந்து அதைப் பார்த்துட்டு, ‘இப்படிக்கூட ஒரு முட்டாள் இருப்பானா? யாரோ ஒரு நடிகை அம்மையிலே குளிர்ந்து போனதற்காக ஆயிரக் கணக்கிலே செலவு செய்து இப்படி ஒரு சமாதி கட்டுவானா ?ன்னார். ‘மும்தாஜுக்காக ஆக்ராவில் தாஜ்மகால் கட்டிய ஷாஜகான் முட்டாள்னா நானும் முட்டாள்தான்’னு சொல்லி, அவரை அனுப்பி வைச்சேன் நான்."