உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

விந்தன்


"இல்லே, இருப்பத்தைஞ்சி’

“ஒரு நாளைக்கு என்ன வசூலாகும் ?”

“ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது.”

“கிடைக்கிற காசையெல்லாம் சுருட்டி நல்ல வாடகை வரக் கூடிய வீடுகளாக் கட்டிப் போட்டுவிட்டு, கம்பெனி நஷ்டத்தில் நடக்கிறது, நான் போய்விட்டால் நாடக உலகமே அஸ்தமித்துவிடுமே என்று என் கையிலே இல்லாத காசைப் போட்டுக் கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று உங்கள் அய்யர் சக நடிகர்களை ஏய்ப்பதற்காக முதலைக் கண்ணீர் விடுவதில்லையா ?”

“அவர் அந்த நாள் மனுஷர் நடிப்பை நாடக மேடையோடு வைச்சிக்கிறது. அவர் வழக்கம்.”

“பிழைக்கத் தெரியாதவராயிருந்திருப்பார் போலிருக்கிறது.”

“பிழைக்கத் தெரியாதவர் மட்டுமில்லே, வாழத் தெரியாதவரும் கூட.”

“அந்த விஷயத்தில் அவர் எப்படியோ, இங்குள்ள நடிகர்களின் சிலர் என்.எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரின் அவல மரணத்துக்குப் பிறகு தங்கள் ஏழேழு தலைமுறைகளுக்கும் சேர்த்து வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள்!”

“அத்த விஷயத்திலே பாகவதரையும் என்.எஸ்.கே. யையும் கொடுத்த சீதக்காதிங்க’ ன்னு சொல்லனும் அதுக்காகவே இப்போ இருக்கிறவங்க அவங்களுக்கு நன்றி செலுத்தனும் எங்கே செலுத்தநாங்க?”

“வாழுங் கலைஞர்களைக் கவனிப்பதுபோல் வாழ்ந்து மறைந்த கலைஞர்களையும் முதல்வர் கருணாநிதியே கவனிப்பார். அதை விடுங்கள்!...'பதி பக்தி’ நாடகத்தில்