பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

உள்ளாக்குதல்

உள்ளாக்குதல் வி. (v.) ஓர் உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு ஆளாக்குதல்; subject some one to an emotion, a state, etc., பழங்கால மதிப்பீடுகள் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன். உள்ளாகுதல் வி. (v.) ஓர் உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு ஆளாகுதல்; become subjected to an emotion, state, etc., 'அறியாமைக்கு உள்ளாகாமல் தடுக்க கல்வி இன்றியமையாத தாகும்.

உள்ளாட்சி பெ. (n.) சிற்றூர்களிலும் நகரங்களிலும் வாழ்பவர்கள் தத்தம் ஊருக்கான நிருவாகங்களை நிகராளிகள் (பிரதிநிதிகள்) மூலம் நடத்தும் முறை; local govemment. உள்ளாடை பெ. (n.) உள்ளுக்குள் அணியும் ஆடை; undergarment.

உள்ளார்ந்த பெ.எ. (adj.) உள்ளே இயற்கையாக அமைந்துள்ள; உட் பொதிந்துள்ள; intrinsic to something; latent. 'பேச்சின் உள்ளார்ந்த கருத்தை உணர்ந்து கொண்டார்.

உள்ளாற்றல் பெ. (n.) ஒருவரின் உள்ளே அடங்கியிருக்கும் வெளிப்படாத திறன்; potential. 'மாணவர்களின் உள்ளாற்றலைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். உள்ளான் பெ. (n.) 1. நீர் நிலைகளில், வாலை ஆட்டியபடி தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண் டிருக்கும் கரும் பழுப்பு கலந்த சாம்பல் நிறப் பறவை; common sand piper. 2. சேற்றில் ஆழமாகத் துழாவு வதற்கு ஏற்ற நீண்ட, குறுகிய அலகைக் கொண்ட சதுப்புநிலப் பறவை; snipe. உள்ளி பெ.(n.) 1. வெள்ளைப் பூண்டு; garlic. 2. சிறுவெங்காயம்; ஈருள்ளி; Onion (of the smaller variety).

உள்ளிட்ட இ.சொ. (int.) கூறப்பட்ட ஒருவரோ ஒன்றோ அல்லது மேற்பட்டவர்களோ மேற்பட்ட வையோ சேர்ந்த என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; particle meaning inclusive of 'including'. தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் வந் திருந்தனர்.

உள்ளிட்டு இ.சொ. (int.) உட்பட' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; connecting two phrases meaning 'including'.

உள்ளிடுதல் வி. (v.) கணிப்பொறியில் சேமிக்க விரும்பும் தரவல்களை விசைப் பலகையில் தட்டிப் பதிவு செய்தல்; key in (the data in a computer). தேர்வுக்கான விடைகளை இணைய தளத்தில் உள்ளிட்டிருந்தனர். உள்ளித் தேங்காய் பெ. (n.) உள்ளீடற்ற தேங்காய்; Coconut with diseased flesh or without flesh. 'நீ வாங்கி வந்த தேங்காய் உள்ளித் தேங்காயாக உள்ளது.

உள்ளிப்பூடு பெ. (n.) உள்ளிப்பூண்டு பார்க்க.

உள்ளிப்பூண்டு பெ. (n.) வெள்ளைப் பூண்டு;உள்ளி; garlic.

உள்ளிருப்பு பெ. (n.) 1. வைப்புநிதி; reserve cash. 2. கருவூலக் காவல்; watching the treasury. உள்ளிருப்புப் போராட்டம் பெ.(n.) உள்ளிருப்பு வேலை நிறுத்தம் பார்க்க. உள்ளிருப்பு வேலை நிறுத்தம் பெ.(n.) பணியாளர்கள் பணியிடத்தின் உள்ளேயே தங்கியிருந்து நடத்தும் வேலை நிறுத்தம்; a fom of protest where the employees stay on the premises of the workplace and go on strike (in India)

stay-

in-strike. உள்ளீடு பெ. (n.) I. ஒன்றுக்குத் திண்மையைத் தரும் வகையில்