பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளடக்கத்தைப் பாராட்ட முடிய வில்லை.2. பொருளடக்கம்; table of contents in a book. நூலில் யார் யார் கட்டுரை எழுதியுள்ளார்கள் என்பதை உள்ளடக்கத்தைப் பார்த்தாலே தெரியும்.

உள்ளடக்குதல் வி. (v.) I. பல கூறுகளைக் கொண்டிருத்தல்; include, contain; consist of. 'நாட்டியம் என்பது பல கூறுகளை உள்ளடக்கிய தொன்மை யான கலை. 2. வரம்பு, வரை யறைக்கு உட்பட்டதாக ஆக்குதல்; comprise. 'சொத்து என்பது அசையும் சொத்து, அசையாச் சொத்துகளை உள்ளடக்கியது.

உள்ளடங்குதல் வி. (v.) 1. ஒன்றில் பல கூறுகள் அமைந்திருத்தல்; be included in something. 'வல்லுநர் குழுவில் அயல்மொழிப் பேராசிரியர்களும் உள்ளடங்குவார்கள்'. 2. ஒன்றில் குறிப்பிட்ட தன்மை அல்லது பொருள் பொதிந்திருத்தல்; be inherent in something. தலைப்புகளைக் கொண்டே கட்டுரைகளில் உள் ளடங்கிய செய்திகளை ஊகித்தறி வதும் ஒரு திறமைதான்'. 3. சற்றுத் தள்ளி அமைதல்; be a little removed or withdrawn from something. 'வீடு சாலையிலிருந்து உள்ளடங்கி யுள்ளது. 4.குரல் தாழ்தல்; be deep within. அவருடைய குரல் உள்ளடங்கி ஒலித்தது.

உள்ளடி நிலம் பெ. (n.) ஏரியை அடுத்துள்ள நிலம்; land next to a tank or lake. உள்ளடி நிலத்தில் செங்கற் சூளை அமைத்திருந்தார்கள்'.

உள்ளது பெ. (n.) உண்மை; உண்மையில் நடந்தது; truth; fact. 'உள்ளதை மறைக்காதே.

உள்ளநாள் பெ. (n.) (இலங்.) I.எப்போதும்; always. 'விடுமுறை என்றால் உள்ளநாள் எல்லாம்

உள்ளறிவு

91

விளையாட்டுதான்' . 2. ஓய்வாக உள்ள நேரம்; available (time, day, etc.,). உள்ளநாள் முழுவதும் அவர்படித்துக் கொண்டேயிருப்பார்.

உள்ளப்பாங்கு பெ. (n.) உளப்பாங்கு

பார்க்க.

உள்ளபடி வி.அ. (adv.) உண்மையாக; உண்மை நிலவரப்படி; உண்மை யான நடப்புப்படி; in truth; in fact. உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி தான். உள்ளம் பெ. (n.) மனம்; mind; heart.

  • உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள். உள்ளமட்டும் கு.வி.எ. (adv.) இருக்கிற வரையிலும்; as long as (anything) lasts. நான் உள்ளமட்டும் நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்றார் அப்பா'.

உள்ளர்த்தம் பெ. (n.) உட்பொருள் பார்க்க.

உள்ளரங்கம் பெ. (n.) விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக, மேற்கூரை போடப்பட்ட பெரிய அரங்கம்; indoor stadium. உள்ளரங்கு பெ. (n.) உள்ளரங்கம் பார்க்க.

உள்ளவன் பெ. (n.) 1. உடையவன்; he who has. 2. பொருளுடையவன்; moneyed man; rich person.

உள்ளவாறு வி.அ. (adv.) உள்ளபடி பார்க்க. உள்ளழற்சி பெ. (n.) உடம்பினுள் ஏற்படும் வேக்காடு; inflammation of the internal organ of the body as in tuberculosis.

உள்ளளவும் பெ. (n.) உள்ளமட்டும்; as long as (anything) lasts. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை (பழ.)'

உள்ளறிவு பெ. (n.) உள்ளுணர்வு, உள்மனம்;

consciousness, intellect, thought-faculty.