பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

உள்மனம்

உள்மனம் பெ. (n) 1. எச்சரிக்கும் உணர்வு, உள்ளுணர்வு; instinct. 2. அடிமனம்;

the subconscious.

உள்வட்டச் சாலை பெ. (n.) எல்லா இடங்களையும் தொடர்புபடுத்துவது போல அமைந்திருக்கும் வட்டமான சாலை; inner ring road.

உள்வணக்கம் பெ. (n.) உள்மன வழிபாடு; worship in spirit.

உள்வயிரம் பெ. (n.) மரத்தின் அகக்காழ்; firmness of wood in the centre of an exogenous tree, core of a tree.

உள்வலி பெ. (n.) 1. புண்புரை முதலிய வைகளின் உட்பக்கத்தில் காணும் வலி; inward pain as in an abscess etc., 2. உள்ளுறுப்பின் வலி; pain in the

internal organ. உள்வாங்குதல் வி. (v.) 1. தளக்காள எல்லையிலிருந்து தள்ளி அமைதல்; be of (the stated place or mark); recede. "கடல் உள் வாங்கியிருக்கிறது'. 2. ஒருவருடைய கண், உதடு முத லியவை அமுங்கிக் காணப்படுதல்; (f eyes, lips, etc.,) be sunken. உடல் மெலித்து கண்கள் உள்வாங்கிக் காணப்பட்டார். 3. மெத்தை போன்றவை அழுத்தத்தால் உன்னே அமுங்குதல்; (of mattress, etc.,) sink. அவன் உட்கார்ந்ததும் மெத்தை உள்வாங்கியது'. 4. கருத்து முதலிய வற்றைப் பற்றுதல்; get; grasp; digest. இருத்தலியல் மெய்ம்மத்தை (தத்து வத்தை) முழுமையாக உள்வாங்கி யிருந்தார்.

உள்வாடகை பெ. (n.) ஒருவர் தான் வாடகைக்கு இருக்கும் இடத்தை அல்லது அதன் ஒரு பகுதியை இன்னொருவருக்கு வாடகைக்கு விடும் முறை; the act of subletting.

உள்வாய் பெ. (n.) I. வாயின் உட்புறம்; inner part of the mouth. 2. ஏரியின் உட்பக்கம்; inside of a lake.

உள்வாயில் பெ. (n.) வீட்டின் வெளி வாயிலை அடுத்து உள்ளே இருக்கும் வாயில்: inner door.

உள்வாரி பெ. (n.) (இலங்.) கல்வி நிலையங்களில் முழு நேரக் கவ்வி பயிலும் முறை; being a regular student. உள்வாரி மாணாக்கர் உள்விளையாட்டு அரங்கு பெ. (n.) உள்ளரங்கம் காண்க.

உள்வீட்டு வேலை பெ. (n.) (இலங்.) ஒருவர் மற்றவருக்குத் தெரியாமலும் எதிராகவும் செய்யும் செயல்; covert act. 'தட்பைக் கெடுக்க உள்வீட்டு வேலை நடந்திருக்கிறது. உள்ள பெ.அ. (adj.) உள் பார்க்க. உள்ளக்கருத்து பெ. (n.) உள்ளக்கிடக்கை

பார்க்க.

உள்ளக்களிப்பு பெ. (n.) மனமகிழ்ச்சி; heartfelt joy, delectation. உள்ளக்கிடக்கை பெ. (n.) ஒருவர் மனத்தின் உள்ளூர வைத்திருக்கும் ஆசை, செய்ய விரும்புவது முதலி யவை; latent or hidden desire, intention. 'இசை பயில வேண்டும் என்ற என் உள்ளக்கிடக்கையை அப்பா புரிந்து கொண்டார்.

உள்ளக்குறிப்பு பெ. (n.) உள்ளக்கிடக்கை

பார்க்க.

உள்ளங்கால் பெ. (n.) காலின் அடிப்பகுதி; sole (of the foot).

உள்ளங்கை பெ. (n) வரிகை காணப்படும் கைப் பகுதி: அகங்கை; palm (of the

hand).

உள்ளடக்கம் பெ. (n.) 1. எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட பொருள்; content; mesage. 'இந்தப் பாடலைப் பாராட்டுகிற அளவுக்கு அதன்