பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சொல்; particle, which when occuring after on oblique form or after dative means 'between' 'among'.

நால்வருள் மூத்தவர் . 3. ஒரு செயல் முடிவதற்கு முன்பு' என்ற பொருளில் பயன்படும் இடைச்சொல்; particle, which when occuring after a dative following a verbal noun means 'before an action is completed'. 'நான் போவதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது'. 4. குறிப்பிடப்படும் காலப்பகுதி முடிவதற்கு முன்பு ' என்ற பொருளில் பயன்படும் இடைச்சொல்; particle, which when occuring with words denoting time means 'before the end of a specified period'. 'பத்து மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவார்.

உள்கட்டமைப்பு பெ. (n.) மக்கள் வாழ அல்லது தொழில் நடத்தத் தேவை யான மின்னிணைப்பு, நீர், சாலை, தொலைத் தொடர்பு போன்ற அடிப்படை ஏத்துகள்; infrastructure. 'மதுரை நகரின் உள் கட்டமைப்பை

மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உள்கட்டுமானம் பெ. (n.) உள்கட்ட மைப்பு பார்க்க.

உள்காது பெ. (n.) ஒலிகளைக் கேட்டல், உடலைச் சமநிலையில் வைத் திருத்தல் ஆகியவற்றைச் செயல் படுத்தும் காதின் உட்பகுதி; inner ear. உள்காயம் பெ.(n.) அடிபட்டாலும் குருதி கசியாமலோ, தசை கிழியாமலோ இருந்து, தோல் கன்றிச் சிவந்து அழற்சிக்கு உள்ளான நிலை; bruise. உள்குத்தகை பெ. (n.) வீடு, நிலம் போன்ற வற்றைக் குத்தகைக்கு அல்லது வாடகைக்குப் பெற்ற ஒருவர் அதை மற்றொருவருக்கு மொத்தப் பகுதி யையோ அல்லது ஒரு பகுதியையோ மீண்டும் வேறொருவர்க்கு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும் முறை; sublease; sublet.

உள்மருந்து

89

உள்கை பெ. (n.) சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்குப் பிறர் அறியாம லிருந்து உதவி செய்பவர்;கையாள்; accomplice. திருடர்களுக்கு வைப்பக உள்கையாக

ஊழியரே துள்ளார்.

இருந்

உள்சாதி பெ. (n.) ஒரு குலத்தின் (சாதி)யின் உட்பிரிவு; subcaste.

Home

உள்துறை பெ. (n.) ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு முதலியவற்றிற்குப் பொறுப்பாக இருக்கும் அரசுத்துறை; ministry; Home department. உள்நாக்கு பெ. (n.) உள்வாயின் குழிந்த மேற்புறத்தின் முடிவில் தொங்கும் சிறு சதை; uvula

உள்நாடு பெ. (n) ஒரு நாட்டின் எல்லைகளுக்குட்பட்ட பகுதி; inland; intermal. 'உள்நாட்டு விவகாரங்களில் அயல்நாடுகள் தலையிடக்கூடாது'. உள்நீச்சல் பெ. (n.) நீரின் மேற்பரப்பில் அல்லாமல் உள்ளுக்குள்ளேயே நீத்துகை; under water swimming. உள்நோக்கம் பெ. (n.) மனத்தின் உள்ளூரக்

கொண்டிருக்கும் கெட்ட எண்ணம்; ulterior motive; hidden intention. அவன் உள்நோக்கத்துடன் பழகு கிறான்.

உள்படம் பெ. (n.) ஒரு பெரிய படத்தின் ஒரு பகுதியைக்காட்டக்கட்டம் கட்டி அதனுள்தரப்படும் சிறிய படம்; inset. *உலகப் படத்தின் முழுத் தோற்றம்'; உட்படம் இந்தியா'

உள்பாடு பெ. (n) ஒன்றின் உட்பக்கம்; inside. 'சட்டையின் உள்பாட்டில் கறைப்பட்டுவிட்டது'.

உள்மருந்து பெ. (n.) உள்ளுக்குக் கொள்ளும் மருந்து; medicine taken internally.