பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

உழை

உழை பெ. (n.) தமிழிசையில் ஏழு இசையொலிகளில் (சுரங்களில்) நான்காவது இசையொலியான (சுரமான) 'ம' வைக் குறிப்பது; நடுவண் (மத்யமம்) சுரம்; the fourth of the seven notes in an octave. உழைத்தல் வி. (v.) I. கடினமாக வேலை செய்தல்; work hard; toil. 'உழைக் காமல் வெற்றி பெற இயலுமா?'. 2. நீண்ட நாள் பயன்படுதல்; (ofthings) last long; wear well. 'இந்தத் தூவல் நன்றாக உழைக்கும்'.

உழைப்பாளி பெ. (n.) I. கடுமையாக வேலை செய்பவர்;

hard - working person. 'இவர் நல்ல உழைப்பாளி'. 2. தொழிலாளி; labourer; worker. உழைப்பாளிகள்கூட்டம்'.

உழைப்பு பெ. (n.) 1. கடுமையான வேலை அல்லது பணி; hard work. 'உழைப்புக் கேற்ற ஊதியம் தர வேண்டும்'. 2. கடும் முயற்சி; great effort. அவருடைய உழைப்பால்தான் மேம்பாலம் கட்டப்பட்டது'. 3. வருமானம் (இலங்.); income. அவன் ஒரு உழைப்பும் இல்லாமல் அல்லல்படுகிறான்.

உழைமண் பெ. (n.) உவர்மண் பார்க்க. உள்' வி. (v.) I.காணப்படுதல் அல்லது

இருத்தல்; be (present in a place or in something). 'கன்னத்தில் மச்சம் உள்ளது'. 2. நிலையாக இருத்தல்; be (in a place permanently); be situated; exist. இமயமலை இந்தியாவில் உள்ளது. 3. குறிப்பிட்ட நிலையில் அல்லது முறையில் அல்லது வடிவில் அமைதல்; be (in the specified condition or state). நீர் கலங்கலாக உள்ளது'. 4.தங்குதல்; வாழ்தல்; stay; live or reside in a place). அவர் 20 ஆண்டுகளாக மதுரையில் உள்ளார்.

5.

உடையதாக இருத்தல்;

வைத்திருத்தல்; கொண்டிருத்தல்; have; possess. அவருக்கு வீடு நிலம் உள்ளது.6.நினைவில் தங்குதல்; பதிதல்; stay. 'அவரைப் பார்த்த நாள் நினைவில் உள்ளது. 7. ஒன்று நிகழ்வதற்குக் குறிப்பிட்ட அளவு நேரம் எஞ்சுதல்; remain. 'பேருந்து கிளம்ப இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது.

உள்' து.வி. (aux.v.) I. ஒரு செயல் விரைவில் நிகழப் போவதைத் தெரிவிக்கப் பயன்படும் துணை வினை; used to express that something is due in the near future. 'திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது'. 2. முதன்மை வினை குறிப்பிடும் செயல் நிகழ்ந்த பிறகு அமையும் நிலையைத் தெரிவிக்கும் துணைவினை; auxiliary verb used to change the main verb to the stative form. மரம் நன்றாக வளர்ந்துள்ளது'. உள்* பெ.அ. (adj.) 1. ஒரு திறப்பின் பின் காணப்படும் பகுதி; (of a house) the interior; (of a container) inside. பெட்டியினுள் என்ன இருக்கிறது?'. 2. வீட்டின் அறை; room of a house. 3. உடனே தெரியாதபடி தள்ளி அமைந்திருப்பது; ஒன்றிலிருந்து விலகிச்செல்வது; (at a stated) distance away from. நெடுஞ்சாலையின் உள்ளாகச் செல்லும் பாதை'. 4. அமைப்பின் பகுதியாக அமைந்த; வெளியில் தெரியாமல் இருக்கிற; inner,interval. 'உட்குழு உட்கட்சிப் பூசல்.

உள்* இ.சொ. (int.) 1. 'உள்பகுதி' என்ற பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபாகிய இடைச்சொல்; particle, which when occuring after on oblique form or after a dative means 'inside'. 'கிணற்றுக்குள் குதித்துக் குளித்தான். 2. இடையில்' என்ற பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபாகிய