பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடிய நோய்; any disease attended with parched tongue and intense thirst. உழலை மரம் பெ. (n.) மாட்டின் கழுத்துக் கட்டை; block ofwood suspended from the neck of a cow to prevent it from straying.

உழலைமாடு பெ. (n.) ஓடிப்போகாதபடி கழுத்தில் உழலை மரங்கட்டியுள்ள மாடு; cow from whose neck a block of wood is suspended so as to impede its running and thus prevent its stray ing

away.

உழவடை பெ. (n.) நிலத்தின் உரிமை; பயிர் செய்யப்போகும் நிலம்; right of cultivating land.

உழவடைத்தல் வி. (v.) உழுவதற்காக நிலத்தை ஒப்படைத்தல்; to make over to another a piece of land for purposes of cultivation.

உழவன் பெ. (n.) வேளாளன்; உழவுத் தொழில் செய்பவன்; famer. உழவன் பாம்பு பெ. (n.) ஒருவகைப் பாம்பு; a kind of snake. உழவாரக் குருவி பெ. (n.) விரைவாகப் பறப்பதும், தனது எச்சிலால் கூடு கட்டுவதுமான ஒரு சிறு பறவை; swift. 'உழவாரக் குருவிகளின் கூடுகளைக் கொண்டு ஒரு வகைப் பருகம் (பானம்) உருவாக்கு கிறார்கள்.

உழவாரப் பணி பெ. (n.) கோயிலின் வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் தூய்மைப்படுத்தும் தன்னார்வத் தொண்டுப்பணி; service of cleaning and maintaining the temple premises offered by devotees. 'நாவுக்கரசர் உழவாரப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

உழவாரப்பிடி பெ. (n.) உழவாரம் பார்க்க. உழவாரம் பெ. (n.) களைக்கொத்தி

போன்ற சிறு கருவி; a small implement used for weeding.

உழுதல்

87

உழவியல் பெ. (n.) மண்ணாய்வு, உழவு செய்யும் முறைகள், உரமிடுதல், பயிர் விளைவித்தல் போன்ற வேளாண்மைச் செயல்பாடுகளை உள்ளடக்கிய பிரிவு; agronomy. 'உழவர்களிடையே இயற்கை உழவியல் முறைகளை அரசு ஊக்கு விக்க வேண்டும்'. உழவீரம் பெ. (n.) உழுதற்குத் தக்க ஈரம்; condition of the ground when it has as much moisture as is needed for ploughing. உழவு பெ. (n.) I. வயலில் கலப்பையால் மண்ணைக் கிளறிவிடும் செயல்; ploughing; tilling. கலப்பை பூட்டி உழவு செய்தார். 2. பயிர்த்தொழில்; வேளாண்மை ; agriculture; farming. உழவுத் தொழில்'.

உழவுக்கட்டி பெ. (n.) உழவிற் பெயர்ந்து வரும் மண்கட்டி; clods in a ploughed field.

உழவுக்கட்டுதல் வி. (v.) முதற்சால் போதல் ; to take the lead in ploughing so as to mark the course, as done by the head team.

உழவுகாடு பெ. (n.) உழவுக்கேற்ற நிலம்; lands that can be ploughed and brought under cultivation.

உழவுகாணியாட்சி பெ. (n.) நிலத்தை உழுது பயிர் செய்யும் உரிமை; sole right to plough and cultivate a land. உழற்றுதல் வி. (v.) அலுப்பு, அசதி போன்றவற்றால் படுக்கையில் புரளுதல்; toss and turn in bed. இரவெல்லாம் படுக்கையில் உழற்றிக் கொண்டிருந்தார். உழுதல் வி. (v.) 1. விதைக்கும் முன் வயலில் கலப்பையால் மண்ணைக்

கிளறிவிடுதல்; plough; till. 'ஏர் பூட்டி உழுதார். 2. நிலத்தில் பயிர் செய்யும் முறை; cultivate the land. உழுபவருக்கே நிலம் உரிமை'.