பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளே இருக்கும் பொருள்; (thehard) core or material (that gives solidity). மூங்கில் உள்ளீடற்றது'. 2. கதை, (கவிதை) செய்யுள் முதலியவற்றின் பொருள்; உள்ளடக்கம்; content of a story, poem, etc., 'கதையின் உள்ளீடும் வடிவமும் சிறப்பாக உள்ளது'. உள்ளீடு செய்தல் வி. (v.) உள்ளிடுதல் பார்க்க.

உள்ளுக்கு வி.அ (adv) மாத்திரை, மருத்து முதலியவற்றை வாய் வழியாக

வயிற்றுக்குள் செல்லுமாறு; (ofdrugs) orally. 'நாட்டு மருத்துவர் உள்ளுக்குச் சாப்பிட மருந்து கொடுத்தார். உள்ளுக்குள் வி.அ. (adv.) 1. மனத்தின் அடித்தளத்தில்; மனத்திற்குள்; within

உள்ளே

93

உள்ளுறை வெப்பம் பெ. (n.) ஒரு திடப்பொருள் நீர்ம நிலையை அடையும்போது வெப்ப நிலையில் மாற்றம் இன்றி அது உள்வாங்கும் அல்லது வெளிவிடும் வெப்ப ஆற்றல்; latent heat.

உள்ளூர் பெ.(n.) குறிப்பிடப்படும் ஊரும் அதைச்சார்ந்த பகுதிகளும்; home town; that which is local.

உள்ளூர்ச்சரக்கு பெ. (n.) 1.உள்நாட்டு

மருந்துப் பொருட்கள்; local product, indigenous drugs. 2. சொந்த ஊரில் விளையும் பொருள்கள்; local product.

(oneself); deep down. 'உள்ளுக்குள் உள்ளூர் வரி பெ. (n.) பொருள்களின் மீது

அச்சமாக இருந்தது'. 2. உள்ளே; inside. பழம் உள்ளுக்குள் அழுகியிருந்தது'. உள்ளுடை பெ.(n.) உள்ளாடை பார்க்க. உள்ளுணர்வு Gu. (n.) காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நிகழப்போவதை மனம் தானே உணரும் திறன்; intuition; instinct. 'உன் உள்ளுணர்வுப்படி நட'

உள்ளும்புறமும் வி.அ. (adv.) முழுமை யாக; முற்றாக; in and out; thoroughly. 'அவரை உள்ளும் புறமும் நன்கு அறிந்தவர்கள் சிலரே'.

உள்ளுறுப்பு பெ. (n.) உடலின் உள்ளே இருக்கும் உறுப்பு; internal organ. உள்ளுறை' பெ. (n.) 1. கழக இலக்கிய அகப்பாடல்களில் வெளிப்படை யாக ஒப்பிடாமல் பொருளைக் குறிப்பால் உணர்த்தும் உவமை; in Agam poems of the classical Tamil, implicit simile; smbolic imagery. 2. நூலின் உள்ளடக்கட்டம்; content of abook. உள்ளுறை பெ. (n.) உள்ளார்ந்த; intrinsic, latent. மாந்தரின் உள்ளுறை ஆற்றல்கள் வலிமையானவை.

உள்ளாட்சி நிருவாகமோ, மாநில அரசோ விதிக்கும் விற்பனை வரி போன்ற வரி; tax levied on commodities by the state government or local bodies. உள்ளூர் விடுமுறை பெ. (n.) குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அரசு அறிவிக்கும் விடுமுறை; local holiday. 'கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நாளன்று மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது'. உள்ளூர வி.அ. (adv.) உள்ளுக்குள்; deep down in one's mind. 'உள்ளூரமகிழ்ச்சி ஊற்றெடுத்தது மகன் பிறந்த செய்தி கேட்டதும்.

உள்ளெரிச்சல் பெ. (n.) பொறாமை; envy, jealousy.

உள்ளே வி.அ. (adv.) 1. உட்பகுதியில்; inside; in (opposite to outside, out or open). 'கதவை உள்ளே தாழிட்டுக் கொண்டார்.2. உடலின் பகுதியாக அமைந்து வெளியே தெரியாத உணவுக்குழல், வயிறு போன்ற வற்றின் உட்பகுதியில்; in. 'சோறு உள்ளே போனதும் தெம்பு வந்தது'. 3. சிறையில்; in prison. 'உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார்.