பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

உள்ளே தள்ளுதல்

உள்ளே தள்ளுதல் வி. (v.) சிறைக்கு அனுப்புதல்; put someone behind bars. 'குற்றம் செய்தால் உள்ளே தள்ளி விடுவார்கள்.

உளநூல் பெ. (n.) 1. உளவியல்; psychology. உளநூல் வல்லுநர்கள்'. 2. உளவியல் நூல்; treatise on psychology.

காண

உளப்பகுப்பாய்வு பெ. (n.) ஒருவருடைய சிக்கல்களுக்குத் தீர்வு அவருடைய உணர்ச்சிகளையும் நடத்தையையும் அவரே புரிந்து கொள்ளும் வகையில் தரப்படும் உளவியல் மருத்துவ முறை; psychoanalysis.

உளப்படுத்துதல் வி. (v.) ஒரு பகுப்பில் உட்படுத்துதல்; include in a classification.'நாம் என்பது கேட்பவ ரையும் உளப்படுத்திக் கூறும் தன்மைப் பன்மையாகும்'.

உளப்பாங்கு பெ. (n.) மனப்பாங்கு, LOGOTULIT GÖTGOLD; attitude; mentality. ஒருவரின் உளப்பாங்கை அறிந்து செயல்பட வேண்டும்'.

உளப்புதல் வி. (v.) உழப்புதல் பார்க்க. உளம் பெ. (n.) உள்ளம் பார்க்க.

உளவறிதல் வி. (v.) உளவுபார்த்தல் பார்க்க.

உளவாளி பெ. (n.) உளவு வேலையில் ஈடுபடுபவர்; spy.

உளவியல் பெ. (n.) மனத்தின் செயல் பாடுகள் குறித்தும், அதன் வெளிப் பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் அறிவியல் துறை; psychology.

உளவியலாளர் பெ. (n.) மனத்தின் இயக்கம் மற்றும் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளைப் பற்றி ஆராய் பவர்; Psychologist.

உளவு பெ. (n.) பிற நாடுகளின் படை (இராணுவ) கமுக்கங்களையோ, அரசியல் கமுக்கங்களையோ, குமு காயப் போக்குகளையோ, தொழில் துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ, தரவல்களைக் கமுக்க மாகச் சேகரிக்கும் முறை; spying; intelligence; espionage.

உளவு பார்த்தல் வி. (v.) வேவு பார்த்தல்; spy; carry out espionage activities. உளறல் பெ. (n) (கேட்பவர் நோக்கில்) பொருளற்ற பேச்சு; (from the hearer's point of view) nonsense. உளறுதல் வி (v.) I. குழறிப் பேசுதல்; talk nonsense. தூக்கத்தில் உளறினாய்'. 2. (கேட்பவருடைய நோக்கில்) பொருளற்று அல்லது கட்டுப் பாடின்றிப் பேசுதல்; blabber. அவனுக்கு ஒன்றும் தெரியாது, சும்மா உளறுவான்'. 3. கமுக்கத்தை வெளியே சொல்லிவிடுதல்; blurt out. உளறுவாயன் பெ. (n.) கமுக்கத்தைக் காப்பாற்றத் தெரியாமல் எளிதில் வெளியே சொல்லிவிடுபவன்; blabber

mouth.

உளி பெ. (n.) I. மரம் செதுக்குவதற்கான கூரிய, அகன்ற அடி விளிம்புடைய இரும்புப்பட்டை செருகப்பட்ட

கருவி; (carpenter's) chisel. 2. (செருப் புத்தைப்பவர்கள்) தோலைக் கிழிப்ப தற்குப் பயன்படுத்தும், மேற்குறிப் பிட்டதைப் போன்ற கருவி; a chisel like imp Iment used for cutting leather. 3. கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி; (Sculptor's or stone worker's) chisel.

உளுத்தங்களி பெ. (n.) உளுத்த மாவைக் கிளறி நல்லெண்ணெய் ஊற்றிச் செய்யும் ஊட்டம் மிகுந்த ஒருவகைக் களி; dish prepared from the flour of blackgram mixed with sesame oil.