பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

உறிஞ்சுதல்

from the roof for keeping vessels with milk, butter, etc., 'உறியில் உள்ள வெண்ணெய்யை எடுத்துக்

கொடுத்தாள் அம்மா. உறிஞ்சுதல் வி. (v.) I. உதடுகளைக் குவித்தோ சிறு குழல் வழியாகவோ நீர்மத்தை உள்ளிழுத்தல்; மூக்கினால் மூக்குப்பொடி முதலியவற்றை

உள்ளிழுத்தல்; sip (a drink); suck up (liquid through a straw); draw in (snuff, etc..). குழந்தை மூக்கை உறிஞ்சியது. 2. நிலம், வேர் முதலியன நீரை உள்ளிழுத்தல்; ஈர்த்தல்; (of soil, roots, etc.,) absorb. மண் நீரை உறிஞ்சி விட்டது. 3.நீர், மண்முதலியவற்றை எந்திரம் மூலம் மேலிழுத்தல்; (of machine) suck up; pump. 'மண்ணை உறிஞ்சி வெளியில் கொட்டும் எந்திரம் வருகிறது'.

உறிஞ்சுதாள் பெ. (n.) மை முதலிய வற்றை உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கொண்ட ஒருவகைத்தாள்; blotting paper. உறிதல் வி. (v.) உறிஞ்சுதல்; draw in. *மூக்கை உறியாதே.

உறியடி பெ. (n.) (திருவிழாக்களின்

போது) இரண்டு உயரமான கழிகளுக்கு இடையில் இருக்கும் குறுக்குக் கழியின் உச்சியில் கட்டியுள்ள மஞ்சள் நீர் நிறைந்த மண்பானையை அடித்து உடைக்கும் விளையாட்டு; festive sport in which young people try to break pots filled with turmeric water suspended from a height. 'உறியடித் திருவிழா.

உறு து.வி. (aux.v.) I. ஓர் உணர்ச்சியை

அல்லது ஒரு நிலையை அடைதல், பெறுதல் என்னும் பொருளில் குறிப்பிட்ட பெயர்ச்சொற்களோடு இணைந்துவரும் துணை வினை; an auxiliary verb added to nouns of feeling

or state, in the sense 'get', 'obtain' (the stated feeling or state). 'குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியுற்றோம்'. 2. வினைப் படுத்தும் வினை; a verbalizer. 'கண்ணுற்றேன்' 'கேள்வி யுற்றேன்'.

கண்ணில்

உறுத்தல் பெ. (n.) 1. உடலில் எரிச் சலையும் நெருடலையும் ஏற் படுத்தும் உணர்வு; (of body) irritation. தூசி விழுந்ததால் உறுத்துகிறது'. 2. குற்றவுணர்வால் மனத்தில் ஏற்படும் குறுகுறுப்பு; pricks of conscience; qualms. QuTÜ சொன்னதால் மனம் உறுத்துகிறது'. 3.இயல்பாக இல்லாமல் இடையூறாக இருப்பது; ஒன்றோடு பொருந்தாமல் இருப்பது; being uncomfortable. படத்தின் விரைவுக்குப் பாடல்கள் உறுத்தலாக உள்ளன.

உறுத்துக்கட்டளை பெ. (n.) ஒருவரின் உரிமைக்கோ சொத்துக்கோ கேடு விளைவிக்க முடியாதபடி, குறிப் பிட்ட ஆள் மீது பிறப்பிக்கும் இறுதி ш7687606007; injunction. உறுத்துதல் வி. (v.) I. தொல்லையான நெருடல் உணர்ச்சி தருதல்; cause irritation; grate. 'கண்ணில் தூசி விழுந்ததால் உறுத்துகிறது'. 2. கடும் சொல், தவறு முதலியவை மனத்தை வருத்துதல்; trouble (one's conscience). பொய் சொல்லிவிட்டோமே

யென்று மனம் உறுத்துகிறது'.

உறுதி பெ. (n.) 1. வலிமை; strength. உறுதியான உடல். 2. மாறாத திடம்; நெகிழாத பிடிப்பு; being firm or determined, firmness. கொள்கை உறுதி உடையவர். 3. முடிந்த முடிவு; நிச்சயம்; being sure or certain about something. 'இன்று மழை பெய்வது உறுதி. 4. சொல்லுறுதி, உறுதி மொழி; promise, assurance; word of honour. 'நாளைக்குள் பணியை முடித்து விடுவேன் என்று உறுதி