பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறினார்.

உறுதிசெய்தல் வி. (v.) உண்மை யாக்குதல்; மெய்ப்பித்தல்; confirm; prove. 'உன் கூற்றை உறுதி செய்ய சான்று உண்டார்

உறுதிப்படுத்துதல் வி. (v.) ஒன்றை உண்மை என்று ஒத்துக் கொள்ளுதல் அல்லது மெய்ப்பித்தல்; confirm; prove. 'இதழில் வந்த செய்தியைப் பற்றிக் கேட்டபோது அவர் அதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். உறுதிப்பாடு பெ. (n.) 1. அசைக்க முடியாத நம்பிக்கை; fimness (of purpose). கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு உடையவர். 2. நாட்டின் நிலையான தன்மை; stability. நாட்டின் உறுதிப்பாட்டைக் குலைக்க சூழ்ச்சிகள் செய்யப்படு கின்றன. உறுதிப்பிணை பெ. (n.) நிலம், வீடு போன்ற அசையாச் சொத்தை ஈடாக அளிக்கும் பிணை; security. உறுதிப்பொருள் பெ. (n.) மக்கள் வாழ்வில் அடையத் தகுந்தவைகளாகக் கூறப்படும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு குறிக்கோள்; objectives worthy of human pursuit, viz., Aram, Porul Inbam, Veedu.

உறுதி முடித்தல் வி. (v.) வீடு, நிலம் போன்றவற்றை மற்றொருவருக்கு உடைமையாக்கும் பொருட்டு ஆவணம் எழுதித் தருதல்; execute an agreement of sale. காணியை யாருக்கும் உறுதி முடிக்கவில்லை'. உறுதிமொழி பெ. (n.) I. கட்டுமுறை (நிபந்தனை)க்கு உட்பட்டு நடப்பதாக அளிக்கும் சொல்லுறுதி; undertaking. 'நன்னடத்தை உறுதி மொழி அளிக்க வேண்டும்.2.நாட்டின் நலன் கருதி ஒருவர் எடுத்துக்கொள்ளும் மெய் யுறுதியுரை (சத்தியபிரமாணம்); pledge. 'ஒருமைப்பாட்டைக் காக்க உறுதிமொழி ஏற்போம்'. 3. அமைச்சர்,

உறுமல்

97

நயன்மன்ற நடுவர் போன்றோர்பதவி ஏற்கும்போது எடுத்துக் கொள்ளும் அதிகாரப் பூர்வமான மெய் யுறுதியுரை; oath (of office). ஆளுநர் பொறுப்பை ஏற்கும் முன் அம்மா நிலத்தின் உயர்முறைமன்றத் தலைமை நடுவர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். 4. வாய் மொழியாகத் தரும் சொல்லுறுதி; assurance, promise. தேர்தல் நேரத்தில் பல உறுதி மொழிகள் அள்ளி வழங்கப்படும்'. உறுதுணை பெ. (n.) உற்ற துணை, துணைவலி (பக்கபலம்); இன்றி யமையாப் பெரும் உதவி; unflinching support. 'எல்லா வகையிலும் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.

உறுப்பினர் பெ. (n.) வரையறுக்கப்பட்ட அமைப்பை அல்லது குழுவைச் சார்ந்தவர்; member (of an organization). உறுப்பு பெ. (n.) 1. தனக்கென தனித்த செயல்பாட்டைக் கொண்டு, உடலின் ஒரு பகுதியாக அமைந் திருப்பது; part of the body, limb. 'உடற்பயிற்சி மூலம் உடல் உறுப்புகள் வலிமை பெறும்'. 2. ஓர் அமைப்பின் ஒரு பகுதி; part of an organization. அணிசேரா நாடுகளின் அமைப்பில் இந்தியா உறுப்பு நாடு'. 3. ஒன்றின் கூறு; feature. 'யாப் பிலக்கணத்தில் அசை ஓர் உறுப்பு'. 4.கணிதச்சமன்பாட்டில் அல்லது ஒரு தொகுப்பில் உள்ள பகுதிகளில் ஒன்று; element (4,5,6,7,8) என்ற கணத்தில் ஐந்து உறுப்புகள் உள்ளன.

உறுமல் பெ. (n.) சில விலங்குகள் உறுமும் ஒலி; (of tiger) roar, of dog, monkey, etc.,) growl, (of pig) grunt. 'புலியின் உறுமல் கேட்டு அஞ்சினான். உறுமிமேளம் பெ. (n.) வளைந்த முன்