பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

உறுமிமேளம்

பகுதியைக் கொண்ட, கோலால் பக்கப் பகுதியில் அழுத்தி இழுக்கும் போது உறுமல் போன்ற ஒலியை எழுப்பும், இரண்டு மேளங்களை இணையாக வைத்தது போல் இருக்கும் தோல் கருவி;

kind of two- headed drum which when played with a curved stick produces a sound similar to a growl.

உறுமுதல் வி (v.) I. புலி, அரிமா போன்ற விலங்குகள் சினம், வெறி போன்ற வற்றை வெளிப்படுத்தும் வகையில் 'உர்உர்' என்ற ஒலியை எழுப்புதல்; roaring. 2. எரிமலை குமுறுதல்; rumbling of volcano. 3. சினத்தால் ஒருவர் சீறிப் பேசுதல்; (of human beings) growl. அவன் அப்படியா செய்தான் என்று அப்பா ஊறுமிக் கொண்டிருந்தார்’.

உறை பெ. (n.) I.கடிதம் முதலியவற்றை வைக்கப் பயன்படுத்தும் தாளால் ஆன கூடு; பொருள்களை மூடு வதற்குப் பயன்படுத்தும் துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடி; envelope (for letters etc.,) cover, case (made of cloth or material similar to cloth). 'விண்ணப்பத்தை உறையிலிட்டு அஞ்சலில் அனுப் பினான். 2. வாள், கத்தி ஆகிய வற்றைச் செருகி வைக்கும் தோலால் ஆன மூடி; scabbard. உறையிலிட்ட கத்தி'. 3. மண் சரிந்து விடாமல் இருக்கக் கிணற்றின் உள்ளே ஒன்றின் மீது ஒன்றாக வைக்கும் பைஞ்சுதை (சிமெண்ட்) வளையம்; cement collar in a wall. உறை இறக்கப் பட்ட கிணறு. 4.தவசங்களைச் சேமிக்கப் பயன் படும் ) ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிப் பத்தாயமாகச் செய்யப் படும் செவ்வக வடிவ மர அமைப்பு; rectangular wooden frame (set one upon another to make a large container for

graines).

உறை ஊற்றுதல் வி. (v.) காய்ச்சி ஆற வைத்த பாலைத் தயிராக்குவதற்காகச் சிறிது புளிப்பு (பெரும்பாலும் மோர்த்துளிகள்) சேர்த்தல்; பிரை குத்துதல்; add a few drops of buttermilk to make milk curdle.

உறைகுத்துதல் வி. (v.) உறை ஊற்றுதல் பார்க்க.

உறைகுளிர் பெ. (n.) நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறும் வெப்ப நிலை; freezing point.

உறைத்தல் வி. (v.) 1. காரமாக இருத்தல்; be pungent or hot. 'குழம்பு உறைக் கிறது. 2.சூடு, குளிர், அடி, உதை முதலியவை உணரப்படுதல்; (ofheat, chillness, pain of being beaten or scolded, etc.,) be felt sharply. 'வெயில் சுள் ளென்று உறைக்கிறது'. 3. கருத்து, பேச்சின் கடுமை முதலியவை மனத்தில் உணரும்படி இருத்தல்; உறுத்துதல்; (of idea, harshness of speech, etc.,) strike, occur.

உறைதல் வி. (v.) 1. கெட்டியாதல்; (of water) freeze; (of oil etc.,) become solid; harden (of blood) clot. 'குளிரால் எண்ணெய் உறைந்து விட்டது'. 2. அச்சத்தால் இயங்க முடியாமல் விறைப்பாதல்; freeze (with fear). திடீரென்று கூக்குரல் கேட்டதால் அச்சத்தில் உறைந்து விட்டான்'. 3. பிரை ஊற்றிய பால் தயிராகக் கெட்டிப்படுதல்; curdle. 'தயிர் நன்றாக உறையவில்லை' . 4. குளிரால் விறைத்தல்; become stif (due to cold); freeze. குளிரில் நின்றால் உறைந்து விடுவாய். 5.தங்குதல்; வாழ்தல்; dwell. 'இறைவன் நம் உள்ளத்துள் உறைகிறான்.

உறைநிலை பெ. (n.) நீர்மப் பொருள்திட நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலை; freezing or solidifying point. 'நீரின் உறைநிலை0° செல்சியசு