பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகும்.

உறைப்பு பெ. (n.) காரச்சுவை; taste of pungency; sharp; spicy taste. 'குழம்பில் உறைப்பு அதிகம்'. உறைபனி பெ. (n.) நிலத்தின் மேல் நீர் உறைந்து காணப்படும் நிலை; frost.

உறைமோர் பெ. (n.) பாலைத் தயிராக்கு வதற்காக ஊற்றப்படும் மோர்;பிரை GLOTA; buttermilk, used as a curdling agent.

உறையுள் பெ. (n.) தங்குமிடம்; boarding. உறைவிடப் பள்ளி பெ. (n.) மாணவர்கள் கட்டாயமாக விடுதியில் தங்கிக் கல்வி பயிலும் முறையில் நடத்தப் படும் பள்ளி; residential school.

உறைவிடம் பெ. (n.) உயிர்கள் வாழ் வதற்கு ஏற்ற இடம்; habitat; abode; place of living. 'உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் அடிப்படைத் தேவைகள்'.

உன்னிப்பு பெ. (n.) I. கூர்மையான கவனம்; watch fulness; keenness.

உன்னிப்பான நோக்குடையவர். 2.மிகுந்த கவனம்; serious. மாணவர் களின் நடவடிக்கையை ஆசிரியர்கள்

உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

உன்னுதல் வி. (v.) எம்புதல்; உந்துதல்; propel. 'உப்புமூட்டைதூக்கிய வனிடம் உன்னித்தூக்கச்சொன்னான்.

ஊக்க ஊதியம் பெ.(n.) பெரும்பாலும் தொழிற்சாலைகளில், உருவாக் கத்தைப் பெருக்கும் பொருட்டுத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துக்கு அதிகமாகத் தரப்படும் தொகை ; incentive.

மேல்

ஊக்கச் சலுகை பெ. (n.) தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் தொழில் துவங்குபவர்களுக்கு

ஊக்கம் தரும் வகையில் வரி முதலிய

ஊசல்

99

வற்றில் அரசு அளிக்கும் சலுகை; concessions (given by the government to entrepreneurs) as incentives. ஊக்கத்தொகை பெ. (n.) செய்து முடித்த அல்லது செய்து வரும் பணி, செயல், சேவை போன்றவற்றிற்கு ஊக்கம் தரும் வகையில் கொடுக்கப்படும் தொகை; cash award; incentive.

ஊக்கம்

பெ. (n.) I. ஒரு செயலைச் செய்வதற்குப் பிறர் தரும் உள வெழுச்சித் (உற்சாகம்) தூண்டுதல்; துணைத்தரவு; encouragement; support; incentive. 'நண்பர்களின் ஊக்கம் என் வெற்றிக்கு உதவியது'. 2. உந்து தல்; motivation;drive. ஊக்கத்தோடு உழைக்கும் உழவர் ஊக்க மருந்து பெ. (n.) விளையாட்டுப் போட்டிகளில் திறமையை அதிகப் படுத்திக்கொள்ள வீரர்கள் விதி முறைக்கு முரணாகப் பயன்படுத்தும் ஒருவகை மருந்து; drug used unlawfully by sports persons to improve their performance during competitions; dope. ஊக்குவித்தல் வி. (v.) ஒரு செயலைத் தொடங்குமாறும் அல்லது அச் செயலைத் தொடரும் வகையிலும் உளவெழுச்சி (உற்சாகம்) தருதல்; encourage; motivate. 'என்பெற்றோரின் பாராட்டுதான் என்னை வெற்றியை நோக்கி ஊக்குவித்தது'.

ஊக்குவிப்பு பெ. (n.) ஊக்கம் தருவதாக அமைவது; boost; encouragement. ஊசல் பெ. (n.) I. பொருளின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை விளக்கு வதற்காக, முறுக்கற்ற மெல்லிய நூலில் மாழைக்குண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு; pendulum. 2. சமைத்த உணவுப்பொருள் கெட்டுப் போயி ருக்கும் நிலை; ஊசிப்போனது; cooked