பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ஊசலாட்டம்

food that has become stale or gone off. குழம்பு ஊசல் வாடை அடிக்கிறது. ஊசலாட்டம் பெ. (n.) முடிவெடுக்க முடியாத தடுமாற்றம்; vacillation. சொந்தத் தொழில் தொடங்குவதா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறார்.

ஊசலாடுதல் வி. (v.) 1. முன்னும் பின்னு மாக அசைதல்; move from side to side; sway. 'காற்றில் மலர்க்கொடிகள் ஊசலாடின். 2. முடிவெடுக்க முடியாமல் தடுமாறுதல்; அலை பாய்தல்; (of a person or of one's mind) waver, vacillate. 'ஊருக்குப் போவதா? வேண்டாமா? என மனம் ஊசலாடி னான்'.3.உயிர் பிரியும் நிலையில் இருத்தல்; பிழைத்தலுக்கும் சாதலுக் கும் இடையே இருத்தல்; (of life) be in a critical or precarious condition. தாத்தாவின் உயிர் ஊசலாடிக் கொண் டிருக்கிறது. 4. மனத்தில் ஐயம் முதலியவை மாறிமாறித் தோன்றவும் மறையவும் செய்தல்; (of doubt, fecling of guilt, etc.,) flicker.

படைத்த காது; very sharp ear. அவனுக்கு ஊசிக்காது, அவனிருக்கும் போது எதையும் பேசாதே'. ஊசித்தட்டான் பெ. (n.) ஊசி போன்ற மெல்லிய உடலைக் கொண்ட சிறிய தட்டான்; damselfly. ஊசித்தொண்டை பெ. (n.) 1. காதைத் துளைக்கும் குரல்; shrill or high pitched voice. 'அவனுக்கு ஊசித் தொண்டை, பேசினால் காது வலிக்கும்'.

2. மிகவும் மெதுவாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் சாப்பிடுபவரைக் குறிக்கும் சொல்; one who takes food slowly and in small morsels. ஊசிபோடுதல் வி. (v.) ஊசியால் குத்தி மருந்தை உட்செலுத்துதல்; inject, give an injection.

ஊசியிலைக்காடு பெ. (n.) ஊசியிலை மரங்களைக் கொண்ட காடு; coniferous forest. ஊசியிலை மரம் பெ. (n.) கூம்பு வடிவக் காய்களையும் ஊசி போன்ற இலை களையும் கொண்ட, இலையுதிர் காலத்திலும் இலைகளை உதிர்க்காத ஒருவகை மரம்; conifer.

ஊசி பெ. (n.) 1. நூல் கோத்துத் தைக்கப் ஊசிவெடி பெ. (n.) குறைந்த ஒலியை

பயன்படும் முள் போல் கூரிய முனையும் சிறுதுளையும் உடைய, மெல்லிய சிறு கம்பி; needle (for sewing). 'தையல் ஊசி'. 2. உடம்பில் குத்தி மருந்து செலுத்தப் பயன்படும் கருவி; syringe with

needle.

ஒருவருக்குச் செலுத்திய ஊசியை மற்றவருக்குச் செலுத்தக் கூடாது'. 3.ஊசியின் மூலம் செலுத்தப்படும் மருந்து; drug given through injection. மருத்துவர் வாரத்துக்கு ஒரு முறை ஊசிப்போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். ஊசிக்காது பெ. (n.) 1. தைக்கும் ஊசி யிலுள்ள துளை; eye of the needle.

2. சிறு ஒலியையும் கேட்கும் திறன்

எழுப்பக்கூடிய குச்சி போன்ற வெடி வகை; small slender cracker producing a sharp, shrill popping noise.

ஊசுதல் வி. (v.) சமைத்த உணவு கெட்டுப்போதல்; (of cooked food) become stale; go off; get rotten. வெஞ்சணம் ஊசிவிட்டது'.

ஊஞ்சல் பெ. (n.) உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் தொங்கவிடப்பட்டிருக் கும் அமைப்பு; $wing. ஊஞ்சலாடுதல் வி. (v.) முன்னும் பின்னும் அசைதல்; move to and fro; swing. கிளையில் பழங்கள் ஊஞ்சலாடின. ஊட்டச்சத்து பெ. (n.) உடல்நலம் அல்லது