பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

ஊடுபயிர்

வரிசைகளுக்கு இடையே சாகுபடி செய்யப்படும் வேறொரு குறுகிய

காலப் பயிர்; short term crop farmed together with the long term crop. கடலைக்கு இடையே ஊடு பயிராக உளுந்து பயிரிட்டார்கள்'. ஊடுருவல் பெ. (n.) ஊடுருவுதல் என்னும்

வினையின் பெயர்ச்சொல்; noun fom of the verb.ஊடுருவுதல்'.

ஊடுருவுதல் வி. (v.) 1.ஒரு பரப்பின்

ஒரு

வழியே உட்செலுத்துதல்; துளைத்துக் கொண்டு போதல்; pierce through; penetrate. வேர்கள் நிலத்தை ஊடுருவிச் செல்கின்றன . 2. ஒலி, ஒளி, மின்சாரம் முதலியன உட்புகுதல்/நீர் உட்புகுந்து பரவுதல்; (of light, electricity) pass through / (of water) seep. 'கண்ணாடி வழியே கதிரொளி ஊடுருவிப் பாய்ந்தது'. 3. (நாட்டின் எல்லைக்குள், அமைப்புக்குள்) கேடு விளைவிக்கும் நோக்கத்தோடு இசைவின்றி நுழைதல்; infiltrate. 'எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற வர்களைப் படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர்.4.(மொழி, இலக்கியம், கலை முதலியவற்றில் பிறருடைய அல்லது பிறவற்றின் கொள்கை, கருத்து முதலியன) பரவிக் காணப்படுதல்; விரவி இருத்தல்; (of ideas, doctrines) pervade. மொழியில் பண்பாட்டு அடையாளங்கள் ஊடுருவியிருக் கின்றன. 5. உட் புகுந்து கடந்து செல்லுதல்; pass through. மூடு பனிக்குள் ஊர்தியின் விளக்கொளி ஊடுருவிச் சென்றது'. ஊடே இ.சொ. (int.) 'வழியே', இடை யில்' என்ற பொருளில் பயன்படும் இடைச்சொல்; particle used in the sense of 'through'; in between. 'துளை களினூடே கதிரொளிபாய்ந்தது'.

ஊடை பெ. (n.) தறியிலோ துணியிலோ குறுக்குவாட்டில் செல்லும் இழை; weft or filling.

ஊத்தப்பம் பெ. (n.) தடித்த தோசை; kind

of thick dosai.

ஊத்தை பெ. (n.) நாற்றமடிக்கும் வியர்வை; அழுக்கு போன்றவை; குறிப்பாக நாற்றமடிக்கும் பல்லின் அழுக்கு; (generally) foul smelling (body) waste; (esp.) plaque of unclean teeth. 'ஊத்தைப் பல்'.

ஊதல் பெ. (n.) 1. வாயில் வைத்து ஊதினால் சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் பொருள்; whistle. குழந்தை ஊதல் ஊதி மகிழ்ந்தது'. 2. குளிர் காற்று; வாடைக் காற்று; cold wind. மார்கழித் திங்கள் ஊதல் தாங்க முடிய வில்லை'.

ஊதல் போடுதல் வி. (v) காய்களைப் புகையில் பழுக்கச் செய்தல்; induce ripening of fruits by smoke. ஊதாங்குழல் பெ. (n.) I.அடுப்பில் நெருப்பு எரிவதற்காக வாயினால் காற்றை ஊதப் பயன்படும் மாழை யால் (உலோகம்) ஆன சிறுகுழாய்;

blow - pipe, used to kindle fire. 2. குழந்தைகளுக்கான விளையாட்டுப் புல்லாங்குழல்; toy flute.

ஊதித்தள்ளுதல் வி. (v.) கடினம் என்று கருதுவதை எளிமையாகச் செய்தல்; do something with ease. 'இந்த வேலையை யெல்லாம் அவன் ஊதித் தள்ளி விடுவான்.

ஊதிப் பெரிதுபடுத்துதல் வி. (v.) ஒன்று மில்லாத நிகழ்வை வலிந்து பெரிய சிக்கலாக்குதல்; exaggerate; cause to be inflated 'சின்ன பையன் பேசியதை ஊதிப் பெரிது படுத்தாதே'. ஊதியக்குழு பெ. (n.) குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்புகளைத் திருத்தி அமைப்பது குறித்து ஆய்வு