பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்து பரிந்துரைக்க அரசால் உருவாக்கப்படும் வல்லுநர் குழு; committee of experts appointed by the govemment the recommending revision pay scales for employees (in India) Pay commission.

ஊதியம் பெ. (n.) 1. பணிக்காகத் தரப்படும் சம்பளம்; pay, salary. 'அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது' . 2. திரைப்படம், நாடகம், இசைத்துறை போன்ற வற்றில் ஒருவர் தனது பங்களிப் புக்காக அல்லது உழைப்புக்காகப் பெறும் தொகை / விளையாட்டு வீரர்களுக்குக் குறிப்பிட்ட அடிப் படையில் தரப்படும் சம்பளம்; fee. ஊதிய விகிதம் பெ. (n.) பணிக்கான அடிப்படைச் சம்பளம் மற்றும் ஒவ்வொரு ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஆகியவை எவ்வாறு அமைந்திருக்கும் என்ற ஏற்பாடு; scale of pay. 'அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களை ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைப்பது வழக்கம்'. ஊது உலை பெ. (n.) இரும்புத்தாது,கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவை நிறைத் திருக்கும் கொள்கலனில் கடும் வெப்பம் நிறைந்த காற்றைச் செலுத்துவதன் மூலம் (அச்சில் வார்க்கத் தேவையான) இரும்புக் குழம்பை உருவாக்கும் அமைப்பு;

blast furnace.

ஐந்து

ஊதுகாமாலை பெ. (n.) உடலை வீங்கச் செய்யும் ஒருவகை மஞ்சள் காமாலை நோய்; jaundice with dropsy. ஊது குழல் பெ. (n.) 1.ஊதாங்குழல் பார்க்க. 2. ஒரு செய்தியைப் பலர் அறியும்படி பரப்புபவர்; person given to trumpeting. அவளிடம் எதையும் சொல்லாதே அவள் சரியான ஊது குழல்'.

ஊமை

103

ஊதுகொம்பு பெ. (n.) வாயில் வைத்து ஊதுகிற பகுதி குறுகியும், மறுமுனை அகன்றும் உள்ள, நீண்ட, ஒலி எழுப்பும் குழல் வடிவக் கருவி; hom; bugle. 'கோவில் திருவிழாவில் ஊதுகொம்பு ஊதினார்கள்.

ஊதுதல் வி. (v.) 1. வாயைக் குவித்துக் காற்றை வெளியேற்றுதல்; blow (air). அடுப்பை ஊதிஊதி வாய் வலிக் கிறது. 2. காற்றை ஒன்றினுள் செலுத்துதல்; நிரப்புதல்; fill in (air). ஊதாம்பி (பலூன்) ஊதிக்கொடு'. 3. உடல் அல்லது உடலு றுப்புப் பெருத்தல்; (of body or body part) swell; bloat. ஆள் அடையாளம் தெரியாதபடி ஊதியிருந்தான்'. 4. ஒலி யெழுப்புதல்; (of train) whistle; (of siren, conch) blow. ஆலையில் சங்கு ஊதும் ஒலி கேட்டது'. 5. காற்றிசைக் கருவிகளை வாசித்தல்; play a wind instrument. 'புல்லாங்குழல் ஊதி னான். 6. புகைத்தல்; smoke. பீடியை ஊதித் தள்ளினான்'. 7. ஒருவரைப் பற்றிமற்றொருவரிடம் கமுக்கமாகக் குறை கூறுதல்; speak ill of someone in their absence. பணியாளர்களைப் பற்றி மேலதிகாரியிடம் யாரோ ஊதி ஊதி அவர் மனத்தை மாற்றியிருக் கிறார்கள்'.

ஊதுபத்தி பெ. (n.) ஊதுவத்தி பார்க்க.

ஊதுவத்தி பெ. (n.) நறுமணத்துக்காக எரிக்கும், மணப்பொருள் பூசப்பட்ட குச்சி; incense stick, joss stick. ஊமத்தை பெ. (n.) முட்கள் நிறைந்த உருண்டையானகாய்களையும், குழல் வடிவப் பூக்களையும் ஒருவகைச் செடி; thom apple, datura plant.

உடைய

ஊமை பெ. (n.) பெரும்பாலும் பிறவி யிலேயே பேசும் திறன் இல்லாதவர்; dump person.