பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

எதிரெடுத்தல்

எதிரெடுத்தல் வி. (v.) வாயா லெடுத்தல்;

to vomit.

எதிரொலித்தல் வி. (v) எழும்பும் ஒலி (சுவர், மலை இவற்றில்பட்டு) திருப்பியொளித்தல்; to echo. எம்புதல் வி. (V) மேலெழுதல் அல்லது துள்ளுதல்; to rise, spring up. எய்தல் வி. (v.) அம்பெய்தல்; to discharge

arrows.

எரிகடுப்பு பெ. (n) எரிச்சலையுண்டாக் குமோர் வகை வலி; pain marked by burning sensation. எரிச்சற்படுதல் வி. (V.) பொறாமைப் படுதல்; to be envious jealous. எரிந்துவிழுநல் வி. (v;) சீற்றம்காட்டுதல்; to wax hot and burst into a temper. எரிமலை பெ. (n.) தெகுப்புக் குழம்பாக கக்கும் மலை ; mountain with a burning hole in which stones and mud are converted into a molten state called lava and thrown out Volcano.

எருதுகட்டு பெ. (n.) ஏறுதழுவுதல் போட்டி;

bull-fighting festival. எருவறட்டி பெ. (n.) கட்டிக் காய வைத்த சாணத்தட்டை ; cake of cow dung used

as fuel.

எல்லாரும் பெ. (n.) யாவரும்; all persons. எல்லை கடத்தல் வி. (v) வரம்பு மீறுதல்; to trespass.

எல்லைமால் பெ. (n.) தான்கெல்லை; four boundaries of a piece of land. எலிப்பயறு பெ. (n.) ஒரு வகைக் காட்டுச்

சிறு பயறு ; a wild variety of pulse. எலிப்பொந்து பெ. (n.) எலி வனை;

rat-

bole.

எலிப்பொறி பெ. (n.) எலியைப் பிடிக்கும் கூண்டு;

rat-trap.

எலிமருந்து பெ. (n.) எலியைக் கொல்வ தற்கிடும் மருந்து; any medicine intended for killing rats.

எலியன் பெ. (n.) பொடியன்; little boy.

எலியெலும்பன் பெ. (n.)

யில்லாதவன்; weak. man.

வலிமை

எலும்பன் பெ. (n.) எலும்பு போன்று மெலித்தவன்; one who is almost a skeleton, emaciated man.

எலும்பி பெ. (n.) எலும்பு தோன்ற மெலிந் தவள்; emaciated woman.

எவ்வண்ணம் பெ. (n.) எவ்வாறு, எப்படி; hour, in which manner.

எவ்வழி பெ. (n.) I. எந்த வழி; which way, witha.2.எப்படி;how.

எவ்வளவு ரு.வி.எ. (adv.) எந்த அளவு; hew much, how far.

எவ்விடம் பெ. (n) எந்தவிடம்; which place,

where.

எழுதல் வி. (v.) 1. எழுந்திருத்தல்; to rise, as from a seat or bed. 2. மேல் எழும் புதல்; to ascend. 3. துயிலெழுதல்; to

awake.

எழுத்தறிவு பெ. (n.) எழுதவும் படிக்கவும் பழகும் பயிற்சி; art of reading and writing.

எழுத்திடுதல் வி. (v.) கைச்சாத்திடுதல்; கையெழுத்திடல்; to put one's signature, எழுத்தெண்ணிப்படித்தல் வி. (v.) ஒன்றும் விடாது கற்றல்; to study a book so carefully as to obtain a through grasp of its contents.

எழுதிக்கொடுத்தல் வி. (v.) எழுத்து மூலமாக ஒப்பந்தம் செய்தல்; to grant in writing to write and deliver, as a voucher, an agreement a contract. எழுதிவைத்தல் வி. (v.) பதிவு செய்து வைத்தல்; toregister write and keep for