பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

ஏக்கம்

ஏக்கம் பெ.(n.) விரும்பியது கிடைக் காமையால் வரும் வருத்தம்; despondency, depression of sprits. ஏக்கம் பிடித்தல் வி. (v.) வருத்தம் மிகுதல்; to be in low sprits, to languise. மகன் இறந்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது'.

ஏக்கழுத்தம் பெ. (n.) I. தலையெடுப்பு; superciliousness, strutting. 2. இறு மாப்பு; arrogance, pride. 3. வீற் றிருக்கை ; sitting majestically.

ஏக்கழுத்து பெ. (n.) நீண்ட கழுத்து; high neck.

ஏக்கறுதல் பெ. (n.) 1. இளைத்தல்; to languish. 2. ஆசையால் தாழ்தல்; to bow before superiors. 3. விரும்புதல்; to desire.

ஏக்கன்போக்கன் பெ. (n.) ஒன்றுக்கும் உதவாதவன்; man of no consequence. ஏக்கிபோக்கி பெ. (n.) ஒன்றுக்கும் உதவாதவள்; woman of no

consequence.

ஏகப்பட்ட கு.வி.எ. (adj.) I. மிகுதியான; plenty. 'அவரிடம் ஏகப்பட்ட நூல்கள் உள்ளன. 2. எண்ணிலடங்கா; numerous. 'அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன்.

ஏங்கிப்போதல் வி. (v.) ஏக்கம் பிடித்தல்; to be in low sprits. 'தாயைப் பிரிந்த குழந்தை ஏங்கிப் போயிற்று'.

ஏங்குதல் வி. (v.) இளைத்தல்; to pine.

நல்ல உணவுக்கு ஏங்குகிறாள். ஏச்சு Gu. (n.) 1. வசவு; abuse.

2. அவமதிப்பு; insult.

ஏச்சுரை பெ. (n.) பழிப்புரை; opprobrium, calumny. 'அலுவலரின் ஏச்சுரை

அனைத்தையும் கொண்டார்.

பொறுத்துக்

ஏசுதல் வி. (n.) இகழ்தல்; to abuse, reproach.

ஏட்டிக்குப்போட்டி பெ. (n.) நேருக்கு மாறான செயல்; logomachic retort. 'எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவதே அவர் வழக்கம்.

ஏட்டுச்சுரைக்காய் பெ. (n.) I. பட்டறி வற்ற கல்வி; book learning that is devoid of practical wisdom. 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது (பழ.)'. 2. பட்டறிவு இன்றி நூலறிவு மட்டு முள்ளவர்; person with such book leaming. அவனொரு ஏட்டுச் சுரைக் காய்; அவனால் எதுவும் செய்து காட்ட முடியாது.

ஏட்டுப்படிப்பு பெ. (n) ஏட்டுச்சுரைக்காய் பார்க்க.

ஏடகப்பை பெ. (n.) ஏடு அல்லது வண்டலை வழிக்கப் பயன்படுத்தும் அகப்பை; ladle used for removing the scum of liquids, skimma.

ஏடல் பெ. (n.) 1. உள்ளீடு; inner content. 2.கருத்து ; meaning, intension, thought. ஏடற்குழு பெ. (n.) கருத்துரைஞர் குழு; advisory board. 'கலைச்சொல் அக ராதித் தொகுப்பு ஏடற் குழுவில் பல துறை சார் அறிஞர்களும் இடம் பெற்றிருத்தல் முகாமை'.

ஏடாகூடம் பெ. (n) 1. தாறுமாறு; perverseness, contradiction. 'எந்தச் செய லையும் ஏடாகூடமாகச் செய்வதே அவரது இயல்பு. 2. குழப்பம்

உண்டாக்கும் நிலை; trouble.

ஏடு பெ. (n.) 1. பூவிதழ்; petal. 2. கண்ணிமை; eyelid. 3. பனை யோலையிதழ்; strip of palmyra leaf for writing. முன்னைக் காலத்தில் ஏட்டில் எழுதுவதே நடைமுறை வழக்கம்'. 4. ஏட்டுப் புத்தகம்; book of palmyra