பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

leaves. 'திருக்குறளின் பழைய ஏடு அருங்காட்சியகத்தில் உள்ளது'. 5. வாழையிலைத் துண்டு; section of a plantain cut, near the base, for use as a plate. 'சிற்றுண்டியைச்சாப்பிட ஏடே போதும். நுனியிலை வேண்டா?' 6.பால், தயிர், கஞ்சி இவற்றின் மேலேடு ; a upper layer of curd, milk, rice. 'ஏடு நீக்கிய பால், ஏடகற்றிய தயிர்; கஞ்சி ஏடு கட்டிவிட்டது'. 7. குறிப்பெழுதும் தாளின் பொதிவு; note book, note pad.

ஏடுகட்டல் பெ. (n.) (மேலேடு) ஆடை படர்தல்; fomation of a scum on the

surface of any liquid. 'காய்ச்சிய பால் ஏடு கட்டிவிட்டது'. ஏடுகோத்தல் வி. (v.) பனையிதழ்களைக் கயிற்றிற் கோத்தல்;

to string together the leaves of a palmyra leaf-book. ஏடுசேர்த்தல் வி. (v.) பனையோலை களை ஏடுகளாகச் சீவிப் பொத்தக மாக்குதல்; to make up a book of the strips of palmyra leaves.

ஏடுதயிர் பெ. (n.) ஆடை நீக்காத் தயிர்; curd from which cream has not been removed.

ஏடுபடர்தல் பெ. (n.) ஆடையுண்டாதல்; formation of coating on the surface of some liquids. 'காய்ச்சிய பாலில் ஏடு படர்ந்துள்ளது.

ஏடெழுதுதல் வி. (v.) I. புதுப்பொத்தகம் எழுதத் தொடங்குதல்; to start writing anew book. 2. படி எடுத்தல்; to begin copy a book.

ஏணல்கோணல் பெ. (n.) ஒழுங்கின்மை; unevenness. 'ஏன் இப்படி ஏணல் கோணலாய் அடுக்கி வைத்துள்ளாய் ஏணி பெ. (n.) மேலேற உதவும் படி யமைந்த மரச்சட்டம்; ladder. ஏணிப்படி பெ. (n.) மேலேற உதவும் மரச்சட்டத்திலமைந்துள்ள குறுக்குச் சட்டம்; step or rung of a ladder.

ஏந்திக்கொள்ளுதல்

113

ஏணிப்பழு பெ. (n) ஏணிப்படி பார்க்க. ஏணை பெ. (n.) துணியாலமைந்த தொங்கும் தொட்டில்;

cloth - cradle hung from a cross piece hammock. அழுகிற குழந்தையை ஏணையில் போட்டு ஆட்டு.

ஏத்தம்வாழை பெ. (n.) நேந்திரம் வாழை;

a kind of banana.

ஏத்துதல் வி. (v.) I. வாழ்த்துதல்; to bless. 2. புகழ்தல்; to prise.

ஏதம் பெ. (n.) 1. துன்பம்; suffering.

2.கேடு ; calamity. 3. அழிவு; nuin. ஏதாகிலும் பெ.அ. (n.) ஏதாவது பார்க்க. ஏதாவது பெ.அ. (n.) ஒன்று அல்லது

மற்றொன்று; whatever.

ஏதிலார் பெ. (n.) I. பிறர் (அந்நியன்); others. 2. வறுமையாளர்; poorman. ஏது பெ. (n.) 1. எது; which. 'உனக்கு இந்த எழுதுகோல் ஏது?'. 2. எங்கிருந்து, எப்படி; hence, how. 'உனக்கு ஏது இந்தப் பணம்'.

ஏதேது பெ.அ. (n.) எதுவாயினும்;

whatsoever.

ஏதேனும் பெ.அ. (n.) குறைந்த அளவாவது; a little of something.

ஏந்தல் பெ. (n.) 1. கையேத்துகை;

stretching out the hands, as a begger. 2.தாங்குகை; holding up, supporting. 3. நீர்த்தேக்கம்; wide shallow pond. ஏந்தி பெ. (n.) தாங்குபவன்; bearer, possession. 'புகழேந்தி, தமிழேந்தி' ஏந்திக்கொள்ளுதல் வி. (v.) I. கையால் தூக்குதல்; to lift by the hands. புத்த கத்தை ஏந்திக்கொள்'. 2. கையால் தாங்குதல்; to support by the hands. குழந்தை கீழே விழாமல் ஏந்திக் கொள்.3. கைகொடுத்தல்; to lend a hand. தொழில் நொடித்த நேரத்தில்