பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐஞ்செலவு பெ. (n.) குழம்பு, கூட்டு போன்றவை செய்வதற்காகச் சேர்க் கப்படும் உசிலைப் (மசாலா) பொருள்கள்; spices condiments.

ஐந்தறிவு பெ. (n.) (பகுத்தறிவு தவிர்ந்த மற்ற) ஐந்து புலன்களின் மூலம் பெறும் அறிவு; five senses.

அரசு

ஐந்தாண்டுத் திட்டம் பெ. (n.) அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னேறு வதற்குக் குறிப்பிட்ட இலக்குகளை அடைய, ஐந்தாண்டுகளில் செயல் படுத்துவதற்கு தடுவண் வகுக்கும் திட்டம்; five year plan (of the central government for planned economic grwoth). சிற்றூர் வளர்ச்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் உதவி யுள்ளன.

ஐந்தாம்படை பெ. (n.) எதிரிகளுக்கு உதவி செய்யும் கும்பல்; fifth column. ஐந்துணவு பெ. (n.) கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் முதலிய ஐந்து வகையால் உண்ணுதற் குரிய உணவுப்பண்டம்; five kinds of food differentiated according to the manner of taking them viz., bitting, licking, drinking, swallowing and munching.

ஐந்தொகை பெ. (n.) வரவு, செலவு, கொள்முதல், விற்றுவரவு, இருப்பு ஆகிய ஐந்தையும் சரி பார்க்கும் கணக்கு விபரம்; balance sheet. ஐம்படைத்தாலி பெ. (n.) கழுத்திலே பிள்ளைகளணியும் ஐந்து படைக் கலன் உருவமைந்த அணி; Gold pendant wom by children in a necklace bearing in relief of five weapons of visnu as an amulet.

ஐம்புலன் பெ. (n.) பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகள்; five senses. ஐம்பெருங்குழு பெ. (n.) அரசர்க்கு இன்றியமையாதவரான அமைச்சர்,

ஐயோ

119

அந்தணர் (அறவோர்), படைத் தலைவர், தூதர், ஒற்றர் என்னும் ஐவகை அரசியல் தலைவர்; five chief officers of a king. ஐம்பெருங்குற்றம் பெ. (n.) கொலை, பொய், களவு, கள்ளுண்ணுதல், சூது என்ற ஐவகைத் தீச்செயல்கள்; the five

heinous sins.

ஐம்பொறி பெ. (n.) கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்து உறுப்புகள்;

five sense organs.

ஐம்பொன் பெ. (n.) பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்ற ஐவகை மாழைகள்; five chiefmetals, viz., gold, silver, copper, iron, and lead. ஐயப்படுதல் வி. (v.) 1. ஐயுறுதல்; suspect. *மயங்கிய நிலையில் இருந்த அவன் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டிருக் கலாம் என்று மருத்துவர் ஐயப் பட்டார். 2.சந்தேகப்படுதல்; have misgivings about; doubt. 'இந்தச் செய்தியில் ஐயப்பட ஒன்றுமில்லை'. ஐயா பெ. (n.) ஆண்களில் அகவையில் மூத்தவரையோ உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும்போது பயன்படுத்தப்படும் மதிப்புரவுச் சொல்;எப்.ஐயா, நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?. 2. தந்தை அல்லது தந்தையின் தந்தை; father or (patemal) grand father. 'சின்னப் பையனாக இருக்கும்போது ஐயா வோடு சந்தைக் குச் சென்றிருக்கிறேன்.

ஐயோ இ.சொ. (n.) ஒருவர் தன்னுடைய வலி, துக்கம், இரக்கம் முதலிய வற்றைத் தெரிவிப்பதற்கு வாக்கி யத்தின்

தொடக்கத்தில் பயன் படுத்தும் இடைச்சொல்; particle used for expressing pain, sorrow, pity, etc., 'ஐயோ! தலைவலி உயிர் போகிறதே!.