பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

ஒத்தடம்

ஒத்தடம் பெ.(n.) வெத்தீரில் துணியை நனைத்து அல்லது இளஞ்சூட்டில் உள்ள தவிட்டைத் துணியில் கட்டி, வலி அல்லது சளி நீங்குவதற்காக உடம்பில் சிறிது வைத்து எடுத்தல்; fomentation; poultice. இடுப்பு வலிக்கு ஒத்தடம் கொடுத்தால் சரியாகும். அவருடைய ஆறுதல் சொற்கள் அவருடைய மனத்தில் ஏற்பட்ட வலிக்கு ஒத்தடமாக அமைந்தது. ஒத்தணம் பெ. (n.) ஒத்தடம் பார்க்க. ஒத்தது பெ. (n.) தகுதியானது; that which is commensurate with fit consistent. ஒத்தபடி கு.வி.எ. (adv.) ஏற்றவாறு; agreeably suitably.

ஒத்தல் வி. (v.) I. சமமாதல்; to be equal. 2.போலுதல்; to resemble. 3. இசைதல்; to be acceptable.

ஒத்தாசை பெ. (n.) ஒருவருடைய வேலையைக் குறைப்பதற்குச் செய்யும் உதவி; help, assistance. தள்ளாத அகவையில் ஒத்தாசைக்கு ஆள்வேண்டாமாற்.

கடன்

ஒத்தி பெ. (n.) பணம் கடனாகப் பெறதன் உடமைகளில் ஒன்றை தருபவருக்கு கொடுத்துவிடுவது; usufructuary mortgage.

ஒத்திகை பெ.(n.) நாடகம், இசைக் கச்சேரி, தேர்வு போன்றவற்றை நிகழ்த்துவதற்கு முன் சரிபார்க்கும் பயிற்சி; rehearsal. 'ஒத்திகையின் போது நன்றாக நடிக்கும் நீ மேடையில் ஏன் தடுமாறுகிறாய்?. 2. பின்னால் நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சியை முன்னதாக நிகழ்த்திப் பார்க்கும் செயல்; rehearsal, trial. இந்திய விமானப்படை பல்வேறு வகையான ஏவுகணைகளைச் செலுத்தி ஒத்திகை நடத்துகிறது.

ஒத்திசைவு பெ. (n.) பொருத்தம்; இயைபு; hamony. கட்டடங்கள் சுற்றுப்புறத் துடன் ஒத்திசைவு கொண்டதாக இருக்க வேண்டும். ஒத்திப்போடுதல் வி. (v.) ஒரு செயலை அல்லது பணியைச் செய்ய வேண்டிய தாளில் அல்லது நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போடுதல்; postpone; defer. 'ஊருக்குப் போவதை ஒத்திபோட முடியாதா?.

ஒத்திருத்தல் வி. (v.) I. இசைந்திருத்தல்; to live in harmony concord, friendship. 2.ஒன்று போல் இருத்தல்; to be similar. ஒத்திவைப்பு வி. (v.) ஒத்திப்போடு பார்க்க.

ஒத்திவைப்புத் தீர்மானம் பெ. (n.) முதன்மையான பொதுச் சிக்கல் ஒன்றைக்கலந்துரையாடும் பொருட்டு பாராளுமன்றம், சட்டமன்றம் முதலிய வற்றில் அவையின் அன்றைய நடவடிக்கைகளைத் தள்ளி வைக்க எதிர்கட்சிகள் கொண்டு வரும் SALOTTO; motion of adjournment on a matter of public importance.

ஒத்துதல் வி. (v.) விலகுதல், ஒதுங்கி நிற்றல்; to make room for; to take on to one side. ஒத்துக்கொள்ளுதல் வி (v.) I.ஒருவருடைய செயல், கருத்து முதலியவற்றைச் சரி என்று மற்றவர் ஏற்றுக்கொள்ளுதல்; accept (as true or correct); agree with. நான் சொல்வதையெல்லாம் நீ ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற தேவை மில்லை. 2. ஒருவரின் தவறான செயலுக்கு அவரே பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்; ஒப்புக்கொள் ளுதல்; admit. முதலில் நீ செய்தது தவறு என்பதை ஒத்துக் கொள். 3. சம்மதித்தல்; consent; agree. 4.உணவு, நீர் முதலியவை ஒரு வருடைய உடல் நலத்திற்கு ஏற்றதாக இருத்தல்; பொருந்துதல்; food, climate,