பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

water, etc., be agreeable to one's health. எண்ணெய் பண்டம் அவளுக்கு ஒத்துக் கொள்ளாது'.

ஒத்துநடத்தல் வி. (v.) இசைத் தொழுகுதல்; to act agreeably to the wishes of another, live in harmony. ஒத்துப்போதல் வி. (v.) இணங்கிப் போதல்; be in agreement with; get along. ஒத்துவருதல் வி. (v.) இணக்கமாக இருத்தல்; சரிபட்டு வருதல்; be in hamony with. எனக்கும் அவருக்கும் ஒத்து வராததால் அவரிடம் பேசு வதைக் குறைத்துக் கொண்டேன். ஒத்துவாழ்தல் வி. (v.) மனமொத்து வாழ்தல்; to live in hamony as a family relation, fellow'servants. ஒத்துழைக்கை பெ. (n.) கூடிவினை செய்கை;

co-operation working in

union.

ஒத்துழைத்தல் வி. (v.) ஒருவரால் செய்ய முடியாத பணியை முடிப்பதற்கு மற்றவர் உடனிருந்து உதவுதல்;

co-operate. 'எந்தத் திட்டமுமே மக்கள் ஒத்துழைத்தால்தான் நிறைவேறும்'. ஒத்துழைப்பு பெ. (n.) இணக்கமான உதவி;

co-operation; assistance. 'இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக அமைய பலருடைய ஒத்துழைப்பு தேவைப் பட்டது'.

ஒத்துழையாமை பெ. (n.) பிற கொள்கை யோடு இணங்கி தடவாமை;

non-

co-operation, dissent. ஒத்தூதுதல் வி. (v.) எல்லாவற்றிற்கும் ஒத்துப்போதல்; say yes to;

be a yes - man. தலைவர் சொல்வதற்கெல்லாம் ஒத்தூதுவதை விட்டுவிட்டு எது சரி என்று எடுத்துச் சொல்லக் கூடாதா?. ஒதுக்கிடம் பெ. (n.) ஒதுங்குமிடம்; place

of retirement.

ஒதுக்கிப்போடுதல் வி. (v.) இனத்தினின்று நீக்கிவிடுதல்; to expel, as from caste.

ஒதுங்குதல்

125

ஒதுக்கிவைத்தல் வி. (v.) ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ அவர் சார்ந்த மக்களுடன் எந்த வகைத் தொடர்பும் இல்லாத வகையில் விலக்கி வைத்தல்; தள்ளிவைத்தல்; exclude something from the community; ostracize. திருடியதால் பஞ்சாயத்தில் அவனை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

ஒதுக்குதல் வி. (v.) 1. திரைச்சீலை, முடி முதலியவற்றை ஒரு பக்கமாகத் தள்ளுதல்; pull back, adjust hair, draw something to one side. 'வெளிச்சம் போதவில்லை சாளரத் திரைச் சீலையை ஒதுக்கு' . 2. ஒன்றை ஒன்றின் ஓரத்தில் இருக்கச் செய்தல்; push to a corner; bring to a side. 'தனக்குப் பிடிக்காத பொரியலை இலையின் ஓரத்தில் ஒதுக்கிவிட்டான்'. 3. குறிப் பிட்ட தொகை, நேரம், இடம் போன்றவற்றைக் குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது நோக்கத்துக்காக தனியாகப் பிரித்து வைத்தல்; set aside; allot.

ஒதுக்குப் பச்சை பெ. (n.) புழுங்கலில் வேகாத நெல்; paddy that is not well boiled and adhering to the sides of the vessel.

ஒதுக்குப்படல் பெ. (n.) காற்றைத் தடுக்குங் கிடைப்படல்; shed to screen cattle from the wind.

ஒதுக்குப்புறம் பெ. (n.) ஊரிலிருந்து சற்றுத்

தொலைவில் தள்ளி அமைத்திருக்கு மிடம்; remote or secluded place. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தோப்பில் கூடிப் பேசினார்கள். ஒதுங்குதல் வி. (v.) 1. இருந்த இடத்

திலிருந்து அகலுதல்; விலகுதல்; move away; be removed. அதிகாரியைக் கண்டதும் ஒதுங்கி வழிவிட்டான்'.