பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

ஒற்றையாள்

ஒற்றையாள் பெ. (n.) சுற்றத்தார் ஒருவரு மில்லாத தனியாள்; single person, one having no relations.

ஒற்றைவலி பெ.(n.) ஒரு பக்கத்து வலி; neuraliga on one side only hemialgia. ஒறுவாய் போதல் வி. (v.) I. வாயொடி தல்; to be broken at the edge; to be chipped off. 2. குறைவடைதல்; to be defective.

ஒறுவாயன் பெ. (n.) உதடு சிதைந்த வாயுடையவன்; haralipped man. ஒன்றரைக் கண்ணன் பெ. (n.) ஒரு பக்கஞ் சரிந்த பார்வையன்; one who looks obliquely one who squints.

ஒன்றாக வி.எ.(adv.) உறுதியாக; certainly, surely, positively.

ஒன்றிக்கட்டை பெ. (n.) தனித்த ஆள்; single person, individual. ஒன்றிக்காரன் பெ. (n.) மனைவியில் லாதவன்; bachelor or widower. ஒன்றியாள் பெ. (n.) ஒற்றையாள்; தனியாள்; single person. ஒன்றிரண்டாய் அரைத்தல் பெ. (n.) பொடியாக்காமல் சிறிய துண்டு களாகும்படி அரைத்தல்; grinding into several small rough granular pieces without making into a fine powder. ஒன்றிரண்டு வி.எ. (adv.) மிகக் குறைவு; one or two, a few..

ஒன்றுக்கிருத்தல் வி. (v.) சிறுநீர் கழித்தல்; to orinate.

ஒன்றுக்குமற்றவன் பெ. (n.) பயனற் றவன்;

good-

for-nothing useless person. ஒன்றுகட்டுதல் வி. (v.) சரிப்படுத்துதல்; to square up; to balance.

ஒன்றுகுடி பெ. (n.) ஒட்டுக்குடி; family or person living in another's house or garden.

ஒன்றுகூட்டுதல் வி. (v.) 1. ஒன்றாய்ச் சேர்த்தல்; to gather together, collect. 2.ஒரு மனதாக்குதல்; to bring about an

agreement.

ஒன்று கூடுதல் வி. (v.) 1. ஒன்றாய்ச் சேர்தல்; to meet one another, to gather in an assembly. 2. ஒன்றுபடுதல்; to be united in harmony.

ஒன்றுகை பெ. (n.) இசைகை; fitting together.

ஒன்றுபடுதல் வி. (v.) I. ஒரு தன்மை யாதல் ; to coalesce. 2. இணக்கமாதல்; to make peace.

ஒன்றுபாதி பெ. (n.) I. பாதி; moiety, half. 2. ஏறக்குறைய பாதி; roughly half. 3. தடுஇரவு; mid night. 4. சில பல;

some.

ஒன்றும் பெ. (n.) சிறிதும்; anything, even onething.

ஒன்றுமற்றவன் பெ. (n.) 1. ஏழை, வறியவன்; destitute, poorman. 2.பயனற்றவன்; good for nothing fellow; useless person.

ஒன்றுவிட்ட கு.பெ.எ. (adv.) உறவு முறையில் ஒரு தலைமுறை விட்ட; one step removed in relationship. ஒன்றுவிடாமல் வி.எ. (adv.) முழுமையாக ஒன்றும் விடாமல்; not leaving out anything everything included, entirely, fully.

ஓக்காளம் பெ. (n.) வாந்தியெடுக்க வேண்டும் போன்ற உணர்வு; nausea; retching.

ஓங்காரம் பெ.(n.) I. 'ஓம்' என்னும் மந்திரம்; பிரணவம்; mystic syllable ஓம். ஓங்காரநாதம் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் ஒலிப்பேழைகள் வந்துள்ளன.' 2. வலுத்த ஒலி; roar. *புயல் காற்று ஓங்காரமிட்டு வீசியது'.