பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

ஓடம்

ஓடம் பெ. (n.) குறைந்த அகலமும் அதிக நீளமும் உடைய ஒருவகைச் சிறிய படகு; kind of small boat to fenry passengers across ariver or a lake. ஓடிப்பிடித்து விளையாடு வி. (V.) பலர் ஓட

ஒருவர் துரத்திப் பிடித்துத் தொடுதல்; tag (game). தெருவில் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண் டிருந்தனர்.

ஓடிப்போதல் வி. (v.) (மன வருத்தத்தால் வீட்டை விட்டு) வெளியேறுதல் (காதலிப்பவருடன் வீட்டுக்குத் தெரியாமல் வெளியேறுதல்); run away (from home in protest); elope. ஓடிப்போன தன் மகளை நினைத்து அவர் கண்ணீர் விடாத நாளே இல்லை. ஓடியாடுதல் வி. (v.) (களைப்பு இல்லாமல்) அலைந்து திரிதல்; be active and energetic; move ab out actively. அவரால் முன்போல் ஓடியாட முடியவில்லை.

ஓடிவருதல் வி. (v.) (இக்கட்டான நேரத்தில் உதவி செய்தல்; come forward (to help). 'தம்பிக்கு ஒரு சிக்கல் என்றால் அண்ணன் ஓடி வந்து விடுவார். ஓடு பெ.(n.) I.சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு; tile (for roofing). ஓடு போட்ட வீடு. 2. மண் பானையின் உடைந்த பகுதி; சில்லு;

broken piece of earthem ware, potsherd.

'வழியில் கிடந்த ஓடு காலைக் குத்திவிட்டது'. 3. (ஆமை; தண்டு) உடலின் மேல் பகுதியில் இருக்கும் கனமான அல்லது உறுதியானகூடு ; (of a tortoise, turtle, crab, etc.,) shell. 4.(முட்டை) மேல் புறத்தில் கூடு போல இருக்கும் பகுதி; shell, hard

outer cover.

ஓடுகாலி பெ. (n.) (முறைகேடாக)

வீட்டை விட்டுச் சென்றுவிடும்

பெண்; girl or woman of loose morals who runs away from home. அந்த ஓடுகாலி திரும்பி வந்தால் நான் வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன்'. 2. ஓடிப் போய்விடும் வீட்டு விலங்கு; (of domestic animals) stray. ஓடுகாலி மாடு.

ஓடுதல் வி. (v.) நடப்பதை விட விரைந்து

ply.

செல்லுதல்; (மீன் போன்றவை நீரில்) விரைவாக ஊர்ந்து செல்லுதல்; run. வேகமாக ஓடித்தான் ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்தது'. 2. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத் திற்குச் செல்லுதல்; run; 3.உருளுதல்; roll (fast). 4. பாய்தல்; flow, pass. 5. விரைவாகத் தப்பிச் செல்லுதல்; flee; escape. 6. வேறிடம் செல்லுதல்; run away. 7. நாடிச் செல்லுதல்; run after. 8. விரைதல்; run. ஓடுதளம் பெ.(n.) வானூர்தி மேல் எழும் முன் அல்லது கீழ் இறங்கிய பின்சற்றுத் தூரம் ஓடுவதற்கான நீண்ட பாதை; run way.

ஓடை பெ. (n.) (பெரும்பாலும்) இயற்கையாக ஆற்றிலிருந்து பிரிந்து வரும் (சிறிய) நீர்வழி ; நீரோடை ; stream or rivulet. 'பாறைகளுக்கு அருகிலேயே ஒரு சிறு ஓடை'

ஓணான் பெ. (n.) தடித்த சொர சொரப்பான செதிகள் உள்ள தோலும் கூம்பு போன்ற வாயும் நீண்ட வாலும் கொண்ட, பல்லி இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு விலங்கு; garden lizard. ஓதுதல் வி. (v.) 1. முறைப்படி வாய்

விட்டுச் சொல்லுதல்; பேயோட் டுகைச் செய்தல்; recite; chant. 'பூசாரி மந்திரம் ஓதிப் பேயை விரட்டினார் திருமணம் நடத்தி வைத்தார். 2. குறை கூறுதல்; whisper.

ஓந்தி பெ. (n.) 1. ஓணான்; garden lizard. 2.பச்சோந்தி;chameleon.

ஓநாய் பெ. (n.) கூட்டமாக வாழும் இயல்பு உடைய, காட்டு விலங்கு; wolf.