பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓம் பெ. (n.) சிவனியர்களால் மிகப் தூய்மையாகக் கருதப்படும் மந்திரம்; mantra considered most sacred by Saivars.

ஓம்புதல் வி. (n.) பேணுதல்; protect; guard. 'தனி மாந்தனின் உரிமையை உயிரினும் மேலாக ஓம்பும் மக்கள் முற்றதிகாரத்தை ஏற்க மாட்டார்கள். ஓய்ச்சல் பெ. (n.) அசதி;தளர்ச்சி; tiredness; exhaustion. 'ஒரே ஓய்ச்சலாக இருக் கிறது; படுத்துத் தூங்க வேண்டும்'. ஓய்வு பெ. (n.) I. களைப்பை நீக்கிப் பெறும் அமைதி; ஆறுதல்; relaxation (brief) rest from work. 'கிடைத்த ஒரு மணி நேர ஓய்வைக் கூட ஏற்க முடியாதபடி தொலைபேசியில் அழைப்புகள்'. 2. அமைதி நிலை; (complete) rest. ஒரு மாதக் காலம் என்னை ஓய்வில் இருக்கும்படி மருத்துவர் கூறிவிட்டார் . 3. பெரும் பாலும் ஒருவரின் பெயரை அடுத்து வரும்போது) (அரசு) பணிக்காலம் முடிந்த நிலை; state of having retired. ஓய்வு ஒழிச்சல் பெ. (n.) மிகக் குறைந்த நேர ஓய்வு; respite; breathing space, breather. 'காலையிலிருந்து இரவு வரை ஓய்வு ஒழிச்சல் அற்ற வேலை'. ஓய்வுக்காலம் பெ.(n.) வரையறுக்கப்பட்ட அகவைக்குப் பிறகு பணியிலிருந்து விலகிக் கழிக்கும் காலம்; retirement. ஓய்வுக் காலத்தில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.

ஓய்வுநாள் பெ. (n.) I. விடுமுறை நாள்; holiday2Aறித்.) உலகை ஆறு நாட்களில் படைத்த பின் இறைவன் ஓய்வெடுத்த நாளாகக் கூறப்படும் ஞாயிற்றுக் கிழமை; Sunday; day of

rest.

ஓய்வுபெறுதல் வி. (v.) 1. பணியிலிருந்து

விலகுதல்; retire (from servie). முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின் அவர் இன்று பதவியிலிருந்து ஓய்வு

ஓம்

133

பெற்றார். 2. மேற்கொண்டு பங்கு கொள்வதிலிருந்து ஒருவர் நிலையாக விலகுதல்; retire. 'உடல்நிலை நிலையாக அந்த மூத்த தலைவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வூதியம் பெ. (n.) அரசுப் பணியி லிருந்து ஓய்வு பெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசால் வழங்கப்படுகிற ஊதியம்; (retirement pension. ஓய்வூதியர்

பெ. (n.) ஓய்வூதியம் பெறுபவர்; pensioner. ஓய்வெடுத்தல் வி. (v.) அமைதியுடன் இருத்தல்; இளைப்பாறுதல்; take rest. எவ்வளவு தூரம்தான்நடப்பது, சிறிது ஓய்வெடுக்கலாமா?.

ஓயாமல் வி.அ. (adv.) இடைவிடாமல்; தொடர்ச்சியாக; continuously; incessantly. 'ஓயாமல் பெய்த மழை யினால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.

ஓர்மை பெ. (n.) 1. ஒற்றுமை; unity; oneness. 'இந்த நிகழ்ச்சி தொழிலாளர் களிடையே வகுப்பு ஓர்மை வளர் வதற்கு அடிப்படையாக அமைந்தது'. 2.நினைவு; remembrance; memory. உங்களை எங்கோ பார்த்ததாக ஒரு ஓர்மை'.

ஓரகத்தி பெ. (n.) கணவனுடைய உடன் பிறப்பின் மனைவி (ஓர்+அகத்தி); wife of one's husband's brother;

co-sister.

ஓரங்க நாடகம் பெ. (n.) தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே களத்தில் நிகழ்த்தப்படும் நாடகம்;

one-actplay. ஓரம் பெ.(n.) 1. ஒதுங்கிய பக்கம்; side. வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்தி விட்டு வந்தான்'. 2. விளிம்பு; பக்கவாட்டு நுனி; edge, corner.