பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

spit. 4. எரிமலை தீக்குழம்பை அல்லது இயந்திரம் முதலியவை புகையை அதிக அளவில் வெளி யேற்றுதல்; (of Volcano, etc.,) spew (fire), (of machines) let out (smoke), belch out. அனல் கக்கும் விழி . 5. மறைத்து வைத்திருந்த செய்தியைக் கட்டா யத்தின் பேரில் வெளியிடுதல்; cell (the truth under duress). அடி பொறுக்

காமல் அவன் உண்மையைக் கக்கி விட்டான்.

கக்குவான் பெ. (n.) குழந்தைகளுக்குத்

தொடர்ந்து கடுமையான இருமலையும் நீண்ட மூச்சு இரைப்பையும் ஏற்படுத்தும் நோய்; whooping cough, pertussis. கங்காணி(கண்காணி) பெ. (n.) I. தோட்ட வேலை செய்யும் கூலியாட்களை மேற் பார்வையிடும் பணியைச் செய்பவர்; supervisor (of workers in plantations). 2.வெளிநாடுகளில் வேலை செய்ய ஆள் சேர்க்கும் பணியைச் செய்பவர்; agent (who collects people for jobs in foreign countries).

கங்கு பெ. (n.) I. முழுவதும் தணலாக உள்ள கரித்துண்டு; live coal, glowing coal, cinder. அடுப்பிலிருந்து கங்கு

களை வெளியில் தள்ளி நீர் தெளித்து அணைத்தாள்.2. தென்னை, பனை போன்ற மரங்களில் வெட்டிய சிறகு எஞ்சியிருக்கும் மட்டையின் அடிப் பகுதி; part of thestalk remaining attached to palms after it has been chopped off. அடுப்பு எரிப்பதற்குக் கங்குமட்டை நல்லது'.

கச்சிதம் பெ.(n.) I. சற்று அதிகம் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகவும் சரியான அளவு, ஒன்றுக்கென்றே அமைந்தது போன்ற பொருத்தம்; (most) apt, neat, compact. உடை உனக்குக் கச்சிதமாக இருக்கிறது'.

2. ஒரு செயலைச் செய்வதில் நேர்த்தி; perfect. 'கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிப்பான்.

கசிதல்

135

கச்சைக்கட்டுதல் வி. (v.) சண்டைக்குத் அணியமாதல்; be ready for a fight. அவனைத் தொலைத்துவிடுவது என்று கச்சைக்கட்டிக் கொண்டு நிற்கிறான்.

கசக்கிப்பிழிதல் வி. (v.) ஒருவரைக் கடுமையாக வருத்துதல்; squeeze. அவரிடமா வேலை செய்கிறாய், கசக்கிப்பிழிந்துவிடுவாரே!'.

கசக்குதல் வி. (v.) I. ஒன்றை உள்ளங் கையில் வைத்து மற்றொரு கையால் அழுத்தித் தேய்த்தல்; rub. 2. காகித தாள் முதலியவற்றைக் கையால் கண்டபடி சுருட்டுதல்; crumple (laundered clothes or paper). 3. துணியில் அழுக்கு போவதற்காகக் கைகள் இடையே வைத்து தேய்த்துத் துவைத்தல்; squeeze and vinse (linen). கசகசத்தல் வி. (v.) வியர்வையால் பிசுபிசுப்பாக உணர்தல்; feel sticky (with sweat). உடம்பு முழுக்கக் கசகசக்கிறது.

கசகசப்பு பெ. (n.) வியர்வை மிகுதியால் பிசுபிசுப்பாக உணரும் நிலை; feeling of stickiness due to perspiration. *கசகசப்பு போக நன்றாகக் குளிக்க வேண்டும்.

கசங்குதல் வி. (v.) துணி, தாள் போன்ற வற்றில் மடிப்புக்களும் சுருக்கங்களும் தோன்றுதல்; (of clothes, paper) get crumpled. பானைக்குள் சுருட்டி வைத்திருந்தது போல் சட்டை கசங்கி யிருந்தது.

கசமுச என்று வி.அ. (n.) பேச்சைக் குறித்து வரும்போது வெளிப்படையாக இல்லாமல்; (spreading scandal) in whispers.

கசிதல் வி. (n.) அரத்தம், கண்ணீர், வியர்வை முதலியவை மிகச் சிறிய அளவில் வெளிவருதல் அல்லது